மஹர சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை; கைதிகள் பலர் காயம்

மஹர சிறைச்சாலை வளாகத்தினுள் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையைக் கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிறப்பு பொலிஸ் குழுக்கள் பல சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையினுள் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, மஹர சிறைச்சாலைக்கு வெளியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

 மஹர சிறைச்சாலையிலுள்ள கட்டடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தில் கைதிகள் உட்படப் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (01) மாலை மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறே இந்த பதற்றமான சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் சிறைச்சாலை அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர், அதேவேளை சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்புக்காக பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவு ஆகியவற்றுக்குக் கைதிகள் தீ வைத்துள்ளதாகவும், தீயை அணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கைதிகளைப் பார்ப்பதற்காக இன்று பிற்பகல் மஹர சிறைச்சாலைக்கு வந்த கைதிகளின் உறவினர்கள் சிறை வளாகத்தினுள் செல்ல அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அதற்கமைய, அந்த உறவினர்கள் தற்போது மஹர சிறைச்சாலையின் வெளியில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், சிறைச்சாலைக்கு வெளியில் இருக்கும் கைதிகளின் உறவினர்கள், சிறைச்சாலையின் உள்ளிருந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்