பன்முகப் போக்குவரத்து முனையங்களை நிர்வகிக்க அரசுக்குச் சொந்தமான புதிய நிறுவனம்

நாட்டின் பன்முகப் போக்குவரத்து முனையங்களின் (Multimodal transport hubs) நிர்வாகம், இயக்கம் மற்றும் மேம்பாடுகளைக் மேற்பார்வையிடுவதற்காக 100% அரசுக்குச் சொந்தமான பொதுக் வரையறுக்கப்பட்ட நிறுவனம் (Public limited company) ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் திறமையான, ஒருங்கிணைந்த மற்றும் பயனர்களுக்கு ஏற்ற பொதுப் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பொது நிதியியல் மேலாண்மைச் சட்டத்தின் (Public Financial Management Act) விதிகளுக்கு அமைவாக இந்த புதிய நிறுவனம் உருவாக்கப்படவுள்ளதுடன், இது போக்குவரத்து அமைச்சின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திறைசேரிக்குச் சொந்தமான ஒரு பொது நிறுவனமாக (Treasury Ltd., Public Company) இருக்கும்.

கடந்த 2025 டிசம்பர் 29 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இப்போக்குவரத்து முனையங்களின் இயக்கம், நிர்வாகம், தரப்படுத்தல், வணிக மேம்பாடு மற்றும் தேசிய அளவிலான கொள்கைத் திட்டமிடல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கு ஒரு நிரந்தர நிறுவனக் கட்டமைப்பு தேவை என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள், ரயில்கள், டாக்சிகள் மற்றும் ஏனைய போக்குவரத்து முறைகளுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்தவும், பயணிகள் எளிதாக மாறிச் செல்வதற்கும், தேசிய போக்குவரத்து வலையமைப்பு முழுவதையும் சிறப்பாக ஒருங்கிணைக்கவும் பன்முகப் போக்குவரத்து முனையங்களை ஒரு முக்கிய தீர்வாக அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.

தற்போது மாக்கும்புர (Makumbura) மற்றும் கடவத்தை (Kadawatha) ஆகிய பன்முகப் போக்குவரத்து முனையங்கள் இயங்கி வரும் அதேவேளையில், அனுராதபுரம் (தெற்கு) மற்றும் கண்டி ஆகிய முனையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

“நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகளை உள்ளடக்கிய கலந்தாய்வுகளைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சுக்கு கீழ் பொது திறைசேரியின் முழுமையான உரிமையிலும் கட்டுப்பாட்டிலும் இயங்கும் பொது வரையறுக்கப்பட்ட நிறுவனம் ஒன்றை நிறுவப் பரிந்துரைக்கப்பட்டது” என கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலங்கையின் நகர்ப்புற மற்றும் நகரங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து அமைப்பை மேலும் திறமையானதாகவும், ஒருங்கிணைந்ததாகவும், பயனர்களுக்கு உகந்ததாகவும் மாற்றுவது அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும் என்றும் அவர் கூறினார்.

“நாட்டின் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனைய வலையமைப்பின் இயக்கம் மற்றும் எதிர்கால விரிவாக்கத்தைக் மேற்பார்வையிடுவதற்கு, இந்த பிரத்யேக அரச நிறுவனத்தை நிறுவுவதற்கான வழி தற்போது திறக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் மேலும் சேர்த்துக் கூறினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்