இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் நிபந்தனைகள் காரணமாக வாடிக்கையாளர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கிடைத்த புகார்களை அடுத்து, இணையவழி உடனடி கடன் சேவைகள் (online instant loan services) குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) விசாரணையைத் தொடங்கியுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, பல உடனடி கடன் சேவைகள் தற்போது சமூக வலைத்தள விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் கைப்பேசி செயலிகள் (mobile apps) மூலம் தனிநபர்கள் இணையவழியில் கடன்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான கடன்களை வழங்கும் சில நிறுவனங்கள், கடனைத் திருப்பிச் செலுத்தும் போது அதிக வட்டி விகிதத்தில் கடன் தவணைகளை வசூலிப்பதன் மூலம் கடன் வாங்கியவர்களுக்குச் சிரமங்களை ஏற்படுத்துவதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, CID இன் நிதியியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடன் வழங்கும் நிறுவனங்களால் விதிக்கப்படும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் சிலர் கடன்களைப் பெற்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து
colombo bus
பொதுப் போக்குவரத்து - இலங்கை சுற்றுலாப் பயணியின் கசப்பான அனுபவம்