பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் – சர்வதேச அமைப்பு

இலங்கையின் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலம் குறித்து கடும் கவலை வெளியிட்டுள்ள சித்திரவதைக்கு எதிரான சர்வதேச அமைப்பு இந்த சட்டமூலத்தில் அரசாங்கம் மாற்றியமைக்க முயலும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படும் தன்னிச்சையாக தடுத்துவைத்தல்,சித்திரவதை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் சரத்துக்கள் காணப்படுகின்றன  என தெரிவித்துள்ளது.
சர்வதேச அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது
ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு எதிரான சாசனத்தின் கீழ் இலங்கைக்குள்ள கடப்பாடுகளுக்கு முரணாக  அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்ந்தும் அளவுக்கதிகமான பரந்துபட்ட வரையறைகளை பயன்படுத்துவதோடு பரந்த கைது மற்றும் தடுத்துவைத்தலிற்கான அதிகாரங்களையும் வழங்குகின்றது.
அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் பயங்கரவாதத்திற்கான வரையறை தொடர்பில் விசேட கவலைகளை எழுப்புகின்றது. பயங்கரவாதம் குறித்த வரையறை தொடர்ந்தும் அளவுக்கதிகமான பரந்ததாகவும் போதுமான அளவு துல்லியமற்றதாகவும் காணப்படுகின்றது.
அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் முப்படையினருக்கு கைதுசெய்தல், சோதனையிடுதல்,தடுப்புக்காவலில் வைத்தல் ஆகியவற்றிற்கான விரிவான  அதிகாரத்தினை வழங்குகின்றது, பொலிஸ் காவலுக்கு ஒருவரை மாற்றுவதற்கு முன்னர் படையினர் ஒருவரை 24ம் திகதி தடுத்துவைத்திருக்க முடியும் என சர்வதேச அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Malwathu Mahanayake Pushes Back on SJB Claims 1-858629
மக்கள் ஆதரவை இழந்துவரும் அரசாங்கம் பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து சிறுபான்மையினத்தவர்களை திருப்திப்படுத்தமுயல்கின்றது – பௌத்தபீடாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி
Chamara_Sampath_1200x675px_06_08_25
சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?
batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்
humanright comm
அரச ஊழியர்கள் மத ஆடைகளை அணிய அனுமதிக்கும் புதிய விதிகளைக் கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்