இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள 19 கப்பல்களுக்கும் தற்போதைக்கு உதவும் திட்டம் எதுவுமில்லை என இலங்கை தெரிவித்துள்ளது.
கப்பல் எரிபொருள் உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றிற்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஸார ரொட்ரிகோ இதனை தெரிவித்துள்ளதுடன் அந்த கப்பல்களுக்கு உதவுவதற்கு முன்னர் இலங்கை தேசிய நலன்களுக்கே முன்னுரிமையளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
கப்பல்களுக்கு விநியோகத்தை வழங்கும் நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் தடை குறித்து நன்கு தெரிந்துள்ளது.
இலங்கை கப்பல்களுக்கு உதவக்கூடாது என தெரிவிக்கும் எச்சரிக்கைகள் எவையும் அமெரிக்காவிடமிருந்து வெளியாகவில்லை.
கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிலிருந்து 24 கடல்மைல்தொலைவில் நங்கூரமிட்டுள்ளன இதுவரை உணவுகுடிநீர் நெருக்கடி குறித்த எந்த தகவலும் அவர்களிடமிருந்து வரவில்லை, ஈரானிய தூதரகமும் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.
(ரி)