இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்ணவிற்கு எதிராக அரசநிதியை தவறாக பயன்படுத்தியமை ஊழல் விசாரணைகளில் தலையிட்டமை உட்பட 50 குற்றச்சாட்டுகள் அடங்கிய நம்பிக்கையில்லா பிரேரணை தயார் செய்யப்பட்டுள்ளது.
அரசநிதி மற்றும் சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை,இலஞ்ச ஊழல் விசாரணைகளில் தலையிட்டமை, நலன்களில் முரண்பாடு,அதிகார அத்துமீறல் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பாரபட்சமாக செயற்பட்டமை போன்ற 50 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தியமை,நாடாளுமன்ற வாகனங்கள் மற்றும் எரிபொருள் பயன்பாடு,தனிப்பட்ட பயனாளர்களுக்கான செலவினங்கள் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறியமை போன்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.