துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்

ஞானசாரதேரரின் பௌத்ததுறவிக்கான ஆடையை சிறையில் களையவேண்டியிருக்கும் என்பதாலேயே 2019ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க தீர்மானித்தார் என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சட்டத்தரணிகள் சந்திப்பில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டுஇடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் ஞானசாரதேரருக்கு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பௌத்த மதகுருவிற்கான ஆடையை களைய அனுமதிக்கமாட்டோம் என பௌத்த மதகுருமார்களுக்கு அப்போதைய நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள வழங்கிய வாக்குறுதியின் பேரில் ஆரம்பத்தில் ஞானசாரதேரர் சிறையில் காவியுடையை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டார்.எனினும் பின்னர் ஞானசார தேரரின் காவியுடையை அகற்றுவது குறித்து பௌத்தமத தலைவர்கள் கரிசனை வெளியிட்டனர்.பௌத்த துறவி என்ற நிலையிலிருந்து நீக்கப்படாத ஒருவருடைய காவியுடையை சிறையில் அகற்றுவது குறித்து அவர்கள் கரிசனை வெளியிட்டனர்.
இது குறித்து அவ்வேளை ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேனவுடன் ஆராயப்பட்டது, அவர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை வழங்க தீர்மானித்தார்.ஞானசார தேரர் அவ்வேளை கிட்டத்தட்ட ஒருவருட கால சிறைத்தண்டனையை பூர்த்திசெய்திருந்தார்.
பல அமைச்சர்களுடன் இது குறித்து ஆராய்ந்த பின்னர் நானும் பொதுமன்னிப்பு முடிவை ஆதரித்தேன்.இந்த பிரச்சினை நீதிமன்ற தீர்ப்பை தாண்டி பௌத்தமத ஒழுக்கம்,பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கான அரசின் பொறுப்பு தொடர்பான பிரச்சினையாக கேள்வியாக உருவெடுத்துள்ளது.
எழுத்து மூலம் விளக்கமளிக்காமல் பொதுமன்னிப்பு வழங்கும் பழக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என அவர் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு