சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் – 12 பேர் பலி

சவுதிஅரேபிய தலைநகர் ரியாத்தில் விமானநிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 350க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
சவுதிஅரேபியா பங்களாதேஷ் அமெரிக்கா ஜோர்தான் சூடான் எகிப்து சிரியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனியர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.தாக்குதலை தொடர்ந்து சவுதி அரேபியாவின் கிங்காலித் விமானநிலைய நடவடிக்கைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
காயமடைந்த சிலரின் நிலை ஆபத்தானதாக உள்ளது விமானநிலையத்திற்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட்டு வருகின்றோம் என சவுதிஅரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் உள்நாட்டுமுனையத்திலிருந்தவேளை கேட் 401 தாக்குதலிற்குள்ளானது,என் கண்முன்னால் பலர் காயமடைந்தனர் அங்கிருந்து தப்பியோடினார்கள் என பயணியொருவர் தெரிவித்துள்ளார்.விமானநிலையத்திலிருந்து பல அம்புலன்ஸ்கள் வெளியேறுவதை பார்த்ததாக ஒருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
யேமனில் உள்ள சவுதி அரேபியா தலைமையிலான இராணுவகூட்டணி இதனை இனப்படுகொலை என கண்டித்துள்ளதுடன் கடும் பதிலடி குறித்து எச்சரித்துள்ளது.
கடந்த ஒரு வாரகாலமாக சவுதிஅரேபிய விமானநிலையங்களை இலக்குவைத்து ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்