சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு

சிறைத்தண்டனை அனுபவிக்கும் பௌத்தமதகுருமாரை சிறைச்சாலைக்கு வெளியே காவியுடையுடன் அழைத்து செல்ல அனுமதிக்கும் புதிய சிறைச்சாலை விதிகளை அரசாங்கம் இரண்டு வாரங்களுக்கும் அறிமுகப்படு;த்தவுள்ளது.
சிறைத்தண்டனையை அனுபவி;க்கும் பௌத்தமதகுரு எந்த நிக்காயாவை சேர்ந்தவரோ அந்த நிக்காயாவின் பரிந்துரையுடன் அவரை சிறைச்சாலைக்கு வெளியே சீருடையுடன் அழைத்து செல்வதற்கு அனுமதிக்கும் புதிய விதிகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஞானசார தேரரின் துறவறஆடை களையப்பட்டதால் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஜனாதிபதிக்கும் பௌத்தமத தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்தே இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின்போது 1877ம் ஆண்டின் சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தில் பௌத்த துறவிகளுக்கு விசேட ஏற்பாடுகள் எதுவும் இல்லை எனவும் சிறைச்சாலை அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டே செயற்பட்டனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தற்போதுள்ள சட்டங்களை மீறி உத்தரவுகளை பிறப்பிக்கப்போவதில்லை,சட்டவிதிகளை திருத்துவதே பொருத்தமான தீர்வாகும் என குறிப்பிட்டிருந்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gnasa
ஞானசாரதேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சட்டத்திற்கு புறம்பானது – சரத் என் சில்வா
neha4
யார் இந்த நெஹா போரா? ஏன் இவர் இந்தியாவின் போராட்ட இயக்கத்தின் முகமாக மாறிவருகின்றார்?
sandya-eknaligoda
ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்
iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்