அனோஜன் சிவராஜாவிற்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் சவுதிஅரேபிய சட்டக்குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளை தொடர்ந்து இந்த மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் ஓஎல் அமீர் அஜ்வத்தின் ஒருங்கிணைப்பில் இலங்கையிலிருந்து சவுதி அரேபியா சென்ற சிறப்பு சட்டகுழுவிற்கும்,சவுதி சட்ட வல்லுநர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பல சுற்று ஆலோசனைகளுக்கு பின்னரே இந்த மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.