மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை

by Arundathie Abeysinghe

https://www.asianews.it/

இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையிலான கடற்பரப்பில் சுமார் 20 ஈரானிய எண்ணெய் கப்பல்கள் நகரமுடியாமல் சிக்குண்டுள்ளன. இவற்றில் சில உணவு எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.
இந்த கப்பல்களின் நிலை குறித்து செய்தி வெளியிட்ட வோல்ஸ்ரீட் ஜேர்னல் இந்த கப்பல்கள் தடைகள் மற்றும் கடல்சார் கட்டுப்பாடுகளால் ஈரானிய துறைமுகங்களிற்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளன என தெரிவித்துள்ளது.
இலங்கை, சர்வதேச கப்பல் போக்குவரத்து ,அமெரிக்க டொலரை அடிப்படையாக கொண்ட நிதி,மற்றும் வெளிநாட்டு சந்தை போன்றவற்றை நம்பியிருப்பதால் அதன் துறைமுகங்களும் தனியார் நிறுவனங்களும் அமெரிக்காவின் தடையை எதிர்கொள்ளக்கூடிய ஆபத்து அதிகமாக உள்ளது.
தென்னாசிய நாடான இலங்கையை பொறுத்தவரை ஈரானிய கப்பல்களால் அதற்கு பாதிப்பு ஏற்படாது ஆனால் அமெரிக்காவின் இரண்டாம் நிலை தடைகள் மற்றும் அந்த கப்பல்களுக்கு சேவை வழங்குவதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அது எதிர்கொள்கின்றது.
இலங்கை தற்போது அந்நிய செலாவணியை ஈட்டுவதற்காகவும்,போட்டித்தன்மை வாய்ந்த கடல்சார் மையம் என்ற நிலையை ஏற்படுத்துவதற்காகவும் தனது துறைமுகங்களை நம்பியிருக்கின்றது, இதன் காரணமாக அதிக எச்சரிக்கையுடன் செயற்படுவதன் மூலம் கப்பல்கள் தனது துறைமுகத்திலிருந்து வேறு துறைமுகங்களுக்கு செல்லும் நிலை உருவாவதை இலங்கை விரும்பவில்லை,

உள்நாட்டு சேவையை பெற முடியாத கப்பல்கள் ஏற்கனவே இந்தியாவை நாடுகின்றன என இலங்கையின் கடல்சார் துறையின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கப்பல்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை செய்யப்பட்ட கப்பல்கள் குறித்த விபரங்களை வழங்கும் நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.


அமெரிக்காவின் இரண்டாம் நிலை தடைகளால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை துறைமுக சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது.இதேவேளை வழமையான சேவைகளை வழங்க முடியாத நிலை குறித்து கப்பல் முகவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் கடல்சட்டம் பற்றிய சாசனத்தின் கீழ் கரையோர நாடுகளுக்கு ஆபத்திலிருக்கும் நபருக்கோ கப்பலுக்கு உதவி வழங்கும் உரிமையுள்ளது என கடல்சார் நிபுணர்கள் நிமல்கா ஹேவவிதானவும் சின்மென்டிசும் ஏசியன் நியுசிற்கு தெரிவித்தனர்.
எனினும் இந்த கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே இருப்பதாக அரசாங்கம் கருதுவதால் நகரமுடியாத நிலையில் உள்ள ஈரானிய கப்பல்களுக்கு அத்தியாவசிய சேவையை வழங்கவேண்டிய சட்ட கடப்பாடு தனக்கில்லை என அரசாங்கம் கருதுகின்றது என தெரிவிக்கும் அவர்கள் இந்த கப்பல்களில் உள்ளவர்களுக்கு உயிராபத்து இல்லை என்பதால் இலங்கைக்கு எந்த சட்ட கடப்பாடும் இல்லை என குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும் இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் தரித்து நிற்கும் கப்பல்கள் ஈரானிய நிழற்கடற்படையை பாதிக்கும் இடையூறுகளின் ஒரு பகுதியாகயிருப்பதால் இந்த பிரச்சினை பரந்த அளவிலான கடல்சார் பாதுகாப்பு பிரச்சினைகளை எழுப்புகின்றது.
காலிக்கு அருகில் காணப்பட்ட பத்திற்கும் மேற்பட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள் பின்னர் சர்வதேச கடற்பரப்பிற்கு நகர்ந்துள்ளன..இந்த சூழலானது இலங்கையை ஒரு புவிசார் மோதலின் மையத்தில் நிறுத்துகின்றது.

இதன் காரணமாக அரசாங்கம் ஒரேநேரத்தில் மூன்று சவால்களை எதிர்கொள்கின்றது. இலங்கை நிறுவனங்களை அமெரிக்க பொருளாதார தடைகளில் இருந்து பாதுகாப்பது,கப்பல் பணியாளர்கள் தொடர்பிலான மனிதாபிமான கொள்கைகளை கடைப்பிடிப்பது,மற்றும் நம்பகமான கடல்சார் மையம் என்ற நாட்டின் நற்பெயரை பாதுகாப்பது.
வெளியுறவுக்கொள்கை கண்ணோட்டத்தில் அமெரிக்காவின் தடைகளை தவிர்க்கும் அதேவேளையில் இலங்கையால் உண்மையான மூலோபாய சுயாட்சியை பேண முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.
உண்மையில் எண்ணெய் கப்பல் முரண்பாடு ஒரு எச்சரிக்கையாகும் ,”இன்றைய உலக பொருளாதாரத்தில் புவிசார் நடுநிலைமை தானாகவே பொருளாதார பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்காது”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை