ஞானசார தேரர் சிறை சென்ற பின்னர் ஊடகவியலாளர் பிரகீத் மனைவி சந்தியாவிற்கு எதிராக கடும் வெறுப்பு பரப்புரை- அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என ஊடக அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்

ஞானசார தேரர் சிறைக்கு சென்ற பின்னர் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட மனைவி சந்தியா எக்னலிகொடவை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் வெறுப்பு பரப்புரையை ஊடக அமைப்புகள் கண்டித்துள்ளதுடன் வெளிப்படையான பாதுகாப்பு கவலைகளை கருத்தில் கொண்டு சந்தியாவை பாதுகாக்கவும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஊடக அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது

 

ஞானசார தேரர் தனது எஞ்சிய தண்டனை காலத்தை அனுபவிப்பதற்காக சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து சந்தியா எக்னலிகொடவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் வெறுப்புபரப்புரையை நாங்கள் கண்டிக்கின்றோம்.
இந்த பிரச்சாரமானது சந்தியாவின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என நாங்கள் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம்.மேலும் இலங்கையில் ஜனநாயக விழுமியங்களையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வெறுப்பு மற்றும் சகிப்புதன்மையற்ற சூழலை மேலும் தூண்டலாம் என நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.
தனிநபர்களை இழிவுபடுத்துவதற்கும் அல்லது அவர்களுக்கு எதிராக சட்டவிரோத போக்குகளை தூண்டுவதற்கும் ஊடக தளங்களை பயன்படுத்துவது பொறுப்புள்ள பத்திரிகை தத்துவம் மற்றும் ஜனநாயக ஊடக கலாச்சார தத்துவங்களுடன் ஒத்துப்போகவில்லை.
கடந்த 16 வருடங்களாக சந்தியா தனது கணவருக்கான நீதியைஉண்மையை கோரிவருகின்றார், ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட 2010 ஜனவரியில் காணாமல்போனார்.சந்தியா தொடர்ந்தும் தனது கணவரின் உரிமைக்காக பகிரங்கமாக குரல்கொடுத்து வருவதுடன் ,அவர் காணாமல்போனமைக்கான பொறுப்புக்கூறலை வேண்டிநிற்கின்றார்.சட்டவழிமுறைகளின் மூலம் நீதியை தேடுவதற்காக அவர் அச்வுறுத்தல்களுக்கோ இழிவுபடுத்தல்களுக்கோ அல்லது பயமுறுத்தல்களுக்கோ உட்படுத்தப்படக்கூடாது.
ஆகஸ்ட் 2018 இல் நீதிமன்ற அவமதிப்பிற்காக ஞானசார தேரருக்கு ஆறு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, 2019 மே மாதம் பொதுமன்னிப்பை தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.2016 ஓகஸ்ட் 8ம் திகதி நீதிமன்றம் இந்த பொதுமன்னிப்பு தன்னிச்சையானது செல்லுபடியாகது என தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பின் சட்டரீதியான விளைவுகளை சட்ட அமைப்பின் மூலம் நீதியை பெற முயலும் சந்தியாவிற்கு எதிராக வெறுப்பை பகைமையை ஏவுவதை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்த முடியாது.
இலங்கையின் ஊடக அமைப்புகள் கருத்துசுதந்திரத்தினை தொடர்ந்து பாதுகாத்து வருவதுடன் இந்த அடிப்படை உரிமையையும் தொடர்ந்தும் நிலைநிறுத்தி வருகின்றன.
இருப்பினும் தனிநபர்களின் பாதுகாப்பிற்கும் கண்ணியத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் அச்சுறுத்தல்கள்,வன்முறை தூண்டுதல்கள் அல்லது பிரச்சாரங்களை நியாயப்படுத்துவதற்கு கருத்துசுதந்திரத்தை சுட்டிக்காட்ட முடியாது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

iran ships
மீட்பதா அல்லது பொருளாதார தடைகளா? ஈரானிய எண்ணெய் கப்பல் விவகாரத்தில் இலங்கையின் இக்கட்டான நிலை
anura therars
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் - எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு
houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?