https://www.independent.co.uk/
இந்தியாவில் பிரதமர் நரேந்திரமோடியின் அரசாங்கத்திற்கு சவாலை ஏற்படுத்தியுள்ள ஒரு போராட்ட இயக்கத்தின் மிக முக்கிய முகங்களில் ஒன்றாக அதிகம் அறியப்படாத ஒரு முனைவர் பட்ட மாணவர் உருவெடுத்துள்ளார்.
மோடியின் கட்சி பெற உதவுவதற்காக வாக்காளர் பதிவேட்டிலிருந்து பெருமளவு பெயர்கள் அகற்றப்பட்டதாக தெரிவித்து அதற்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி புதுடில்லியில் முன்னெடுக்கவிருந்த போராட்டத்தை பொலிஸார் முரட்டுக்கரம் கொண்டு அடக்கியுள்ளனர்.அதன் போது கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் 29 வயது நெஹா போரா.

இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர்கள் சங்கத்தின் தேசிய தலைவரான நேஹா( அவர்கள் நாங்கள் -என்பதையே பயன்படுத்துகின்றார்) தான் ஒரு சமூக செயற்பாட்டாளராக மாறவேண்டும் என்பதற்காக திட்டமிட்டு களமிறங்கவில்லை என தெரிவிக்கின்றார்.
நாடகக்கலைமூலமாகவும்,பின்னர் 2019- 20 ம் ஆண்டுகளில் மாணவர்கள் நடத்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் மூலமாகவும் அரசியலுக்குள் தனது பாதை அமைந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
சனிக்கிழமை புதுடில்லியில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இடத்தை மாணவர்கள் அடையவிடமால் பொலிஸார் தடுத்தவேளை அவர்களை டில்லி ஹார்ட் பகுதியில் மீள ஒன்றுகூடுமாறு நேஹ்ரா அழைப்பு விடுத்தார்.
டில்லி ஹார்ட் எங்களின் புதிய ஆர்ப்பாட்ட பகுதி என எக்ஸ்; தளத்தில் அவர் பகிர்ந்து கொண்ட பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த பகுதியை நோக்கி சென்றனர்.பொலிஸார் அவரை கைதுசெய்தனர், கைதுசெய்யப்பட்ட வேளையும் அவர் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

நாங்கள் தான் கைதுசெய்யப்பட்டுள்ளோம் இயக்கம் கைதுசெய்யப்படவில்லை என வீடியோவொன்றில் தெரிவித்த அவர் தொடர்ந்தும் போராடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்..
இந்தியாவின் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் 130 மில்லியன் பேரை வாக்காளர் பதிவிலிருந்து நீக்கிய தேர்தல் ஆணையாளரை பதவி நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.எனினும் தேர்தல் ஆணையம் எந்த தரப்பிற்கும் சார்பாக தான் செயற்படவில்லை என தெரிவித்துள்ளது.
மோடி அரசாங்கம் நியாயபூர்வமான தேர்தல் முறையை கேள்விக்குட்படுத்துவதன் மூலம் எதிர்கட்சிகள் நாட்டின் ஜனநாயகத்தினை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றனர் என தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பின்மை, பொலிஸார் விவகாரங்கள் , பாடசாலை தேர்வு மோசடிகள் போன்றவற்றிற்கு எதிராகவும் போரா போராடியுள்ளார், குரல்கொடுத்துள்ளார்.
உரையாடும்போது மென்மையான குரலில் பேசக்கூடியவர் என்றாலும் இவர் ஒலிவாங்கியின் பின்னாள் நின்று சக்திவாய்ந்த குரலாக உருவெடுப்பார், தனது ஹிந்தி ஆங்கில உரைகள் மூலம் தனக்கென பெருமளவு ஆதரவாளர்களை உருவாக்கியுள்ளார்.
நெஹா தனது உரைகளில் அரசியல் அமைப்பு உரிமைகளை அடிக்கடி சுட்டிகாட்டுவதுடன், மாணவர்களின் குறைகளை சமத்துவமின்மை,மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலின்மை போன்ற பரந்த கேள்விகளுடன் இணைத்து பேசுகின்றார்.
நெஹா உத்தரஹான்டை சேர்ந்தவர், தந்தை இந்திய இராணுவத்தில பணிபுரிந்தவர்,
முஸ்லீம்களுக்கு எதிரானது என விமர்சிக்கப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டமே நெஹாவிற்கு திருப்புமுனையாக அமைந்தது.
நான் எனது தலைமுறை மாணவர்கள் தங்கள் சகாக்களை வகுப்பறைகளில் இருந்து வீதிக்கு கொண்டு சென்றதை பார்த்தேன்,புத்தகங்கள் திரைப்படங்கள் விவரணச்சித்திரங்களி;ல் அவர்கள் கற்றுக்கொண்ட விடயங்களை வீதியில் நடைமுறைப்படுத்தினார்கள் என அவர் தெரிவித்தார்.
தேர்தல் வினாத்தாள்கள் கசிந்தமைக்கு எதிராக ஜூலையில் புதுடில்லியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது அவர் பலரின் கவனத்தை ஈர்த்தார்.கல்வியமைச்சர் பதவி விலகவேண்டும் என அவர் குரல்கொடுத்தார்.
அரசாங்கத்தையும் பொலிஸாரின் நடவடிக்கைகளையும் விமர்சித்து அவர் ஆற்றிய உரைகள் இந்தியாவை தாண்டி உலகின் பல நாடுகளில் பலரின் கவனத்தை ஈர்த்தது.

அதன் பின்னர் இந்திய தலைநகரில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் தவிர்க்க முடியாதவராக போரா மாறிவிட்டார்.
தலைமைதேர்தல் ஆணையாளர் ஞானேஸ்குமார் பதவி விலகவேண்டும் என கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது அவர் பல தடவை கைதுசெய்யப்பட்ட போதிலும் மீண்டும் மீண்டு;ம் போராட்ட களத்திற்கு திரும்பினார்.
தற்போதைய எழுச்சிக்கு சித்தாந்தம் மாத்திரம் உந்துசக்தியாகயில்லை என குறிப்பிட்ட போரா நம்பிக்கையே அதனை விட பலமான சக்தி என்றார்.பயம் எப்படி தொற்றிக்கொள்ளக்கூடிய விடயமோ நம்பிக்கையும் அப்படித்தான் பொதுமக்களிடம் நம்பிக்கை இருக்கின்றது ஏனென்றால் தாங்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியும் என அவர்கள் கருதுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆர்ப்பாட்டங்கள் பல வருடங்களாக தேங்கி நிற்கும் குறைகளின் வெளிப்பாடே என தெரிவித்த அவர் மக்கள் எல்லாவற்றையும நினைவில் வைத்திருக்கின்றார்கள்,மக்களே அந்த அதிருப்தியை , துரோகத்தை,சுமந்து செல்கின்றார்கள், மக்களே அந்த ஏமாற்றத்தை சுமந்துசெல்கின்றார்கள் என்றார்.