ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் அல்லது தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என கஸ்ஸப்ப தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வுpகாரமகாதேவி பூங்காவில் ஞானசாரதேரரின் விடுதலையை கோரி தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர் ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று இங்கு ஆயுதமேந்திய இருவரை அனுப்பினார்கள் அவர்கள் எங்களுக்கு பின்னால் நின்றுகொண்டிருக்கின்றார்கள் ஆபாசவார்த்தைகளை பேசி ஏசுகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தினை குழப்புவதற்காக வன்முறை மோதல்களை பெலவத்தை உருவாக்க முயன்றால் அது நடக்காது, ஜனாதிபதிக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன ஒன்று பதவியை இராஜினாமா செய்வது அல்லது ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது என கஸ்ஸப்ப தேரர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு நாங்கள் சிகப்பு எச்சரிக்கையை விடுக்கின்றோம் எதிர்வரும் நாட்களில் பெருமளவு தேரர்களை கொழும்பிற்கு கொண்டுவருவோம் அது இடம்பெறுவதற்கு முன்னர் ஜனாதிபதி ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும்.
அது நடக்காவிட்டால் ஜனாதிபதி பதவி இழக்கநேரிடும் என தேரர் எச்சரித்துள்ளார்.