செம்மணி மனித புதைகுழி குறித்து எந்தவொரு தனிநபரும் முடிவினை முன்வைக்க முடியாது இணைந்து எடுக்கப்பட்ட முடிவே இறுதி முடிவு என தெரிவித்துள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளிநாட்டு அமைப்புகள் எங்கள் உள்நாட்டு பொறிமுறையை சிதைக்க அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் வடக்குகிழக்கு தெற்கினை சேர்ந்த அனைத்து தந்தையர் தாயரின் துயரத்தையும் புரிந்துகொண்ட அரசாங்கமே தற்போது ஆட்சியில் உள்ளது என தெரிவித்துள்ளதுடன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
செம்மணி மிகவும் உணர்வுபூர்வமான விடயம் என்பதும் பெரும்துன்பியல் விடயம் என்பதும் எங்களுக்கு தெரியும்,
ஆனால் நாங்கள் அழுத்தங்கள் எதனையும் கொடுக்கவேண்டியதில்லை என நான் தெரிவிக்கவிரும்புகின்றேன்.
இந்த அரசாங்கத்தை வடக்குகிழக்கு தெற்கு மக்கள் அனைவரும் இணைந்தே தெரிவு செய்தனர்.ஆகவே செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ள தொகுதியை கூட மக்கள் அரசாங்கத்திற்குதான் வழங்கியுள்ளனர்.
எனவே நாங்கள் எவ்விதத்திலும் இதற்கு தடையாகயிருக்கமாட்டோம்,நாங்கள் ஆட்சியை பொறுப்பேற்ற 2024 செப்டம்பர் மாதமளவில் 15 மனித எலும்புக்கூடுகளே மீட்கப்பட்டிருந்தன தற்போது 550க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகளை மீட்டுள்ளனர்.ஏனென்றால் இந்த அரசாங்கம் நிதியொதுக்கின்றது,தொல்பொருள் தடயவியல் மானுடவியல் நிபுணர்களை வழங்கியுள்ளது.
மிகமுக்கியமாக நீதிபதிகளை நிதிகளை ஒதுக்கின்றது.
நீங்களே பாருங்கள் அந்த புதைகுழியின் வரலாறு 20 ஆண்டுகளுக்கும் மேலானது.15 மனித எச்சங்களே கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 550க்கும் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன இன்னமும் பல மனித எலும்புக்கூடுகளை மீட்கவேண்டியுள்ளது இது மிகவும் கவலை தரும் விடயம்தான்.
செம்மணி மனித புதைகுழி குறித்து எந்த தனிநபரும் உறுதியான முடிவிற்கு வரமுடியாது.நீதிபதி ஒருவர் இதனை மேற்பார்வையிட்டு வருகின்றார், சிறைச்சாலை அதிகாரிகள் மேற்பார்வையிடுகின்றனர்.அவர்கள் இணைந்து தரும்முடிவே ஒரு முடிவு தவிர வேறு ஒருமுடிவிற்கு செல்வதற்கு எந்த காரணமும் இல்லை அது இன்னமும் முடிவடையவுமில்லை.
கடத்;தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் நீதியை வழங்க இந்த அரசாங்கம் முன்வந்துள்ளது.
வடக்குகிழக்கு தெற்கினை சேர்ந்த அனைத்து தந்தையர் தாயரின் துயரத்தையும் புரிந்துகொண்ட அரசாங்கமே ஆட்சிக்கு வந்துள்ளது.இந்த விடயத்தில் நாங்கள் எங்களால் முடிந்தளவிற்கு ஈடுபாட்டை காட்டுகின்றோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பட்டலந்தை அறிக்கை தற்போதுதான் எங்களுக்கு கிடைத்துள்ளது,மாத்தளையில் எங்கள் சகோதாராகள் ஆயிரக்கணக்கி;ல் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட மனித புதைகுழிகள் உள்ளன,அவை தற்போது மூடப்பட்டுள்ளன, உங்களுக்கு கொக்குதொடுவாய் மனித புதைகுழிகள் குறித்து தெரியும்,செம்மணியை கையாண்ட அதேபேராசிரியரே கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியையும் கையாண்டார் என்பது உங்களுக்கு தெரியும்.
ஆகவே நிபுணர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தும்போது எங்களிடம் போதியளவு நிபுணத்துவம் உள்ளதா என ஆராய்வது சிறந்த விடயம்.
மற்றுமொரு விடயம் வெளிநாட்டு அமைப்புகள் எங்கள் உள்நாட்டு பொறிமுறையை சிதைக்க விரும்புகின்றன