பொதுபலசேனாவின் ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கிய தேசிய கட்சி பௌத்தபீடாதிபதிகளின் தலையீட்டுடன் இந்த விடயத்திற்கு தீர்வை காணவேண்டும் என தெரிவித்துள்ளது.
ஐக்கியதேசிய கட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது
ஞானசாரதேரரை விடுதலை செய்யவேண்டும் என கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் முடிவிற்கு வந்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பிற்கான தண்டனை 18 மாதங்கள் என முன்னாள் பிரதமநீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.ஞானசாரதேரர் குற்றமிழைத்தது முதல் இதுவரை பத்துமாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டார்.
கடந்தகாலங்களில் பௌத்தபீடங்களின் தலைமை மதகுருமார் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.ஞானசாரதேரருக்கு மற்றுமொரு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாத பௌத்தமதகுருமாருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவை பெற்றது தவறு இது பாரிய தவறு சிறையில் வைத்து ஞானசாரதேரரின் காவியுடையை களைந்தவர்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது