ஹோமாகம பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கைது: காவலில் சந்தேகநபர் உயிரிழந்த விவகாரம்

பொலிஸ் காவலில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஹோமாகம பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் காவலில் நிகழ்ந்த உயிரிழப்பு தொடர்பான மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹோமாகம பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த இஷார ஹர்ஷன எனும் இளைஞனின் மரணம் தொடர்பிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் காவலில் உள்ள சந்தேகநபர்கள் நடத்தப்படும் விதம் குறித்து இந்த மரணம் பலத்த கவலையை உருவாக்கியுள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

காவலில் உள்ள தனிநபர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு பொலிஸ் அதிகாரிகளுக்கு உள்ளது என்பதை வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இது தொடர்பில் சுதந்திரமான விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இவ்வுயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

chemmani145
ஈழத் தமிழர்களின் மரணங்கள் குறித்து முடிவுகளை எடுக்கராஜ் சோமதேவா தகுதியற்றவர்-ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு
ali sab
நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு விசாரணையில் அலி சப்ரியின் கருத்துகள் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கேள்வி
anadapuram
ஆனந்தபுரச்சமர்- இலங்கைப்போர் வரலாற்றின் ஒரு முக்கிய பகுதி-சர்வதேச அமைப்புஅறிக்கை
864655240_1826856012778251_96490620339609688_n
காணாமல்போன மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் கூறிய ரவிகரன் எம்.பி
spain train1
ஸ்பெயினில் நடந்த ரயில்விபத்தில் குறைந்தது 64 பேர் உயிரிழப்பு - அதிகாரிகள் அறிவிப்பு
humanright comm
ஹோமாகம சந்தேகநபரின் மரணம்: மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு
Screenshot_20261028_121110_Editor-Lite
ஹோமாகம பொலிஸ் நிலைய உயிரிழப்பு – சம்பந்தப்பட்ட பொலிஸாரை இன்னமும் கைதுசெய்யாதது குறித்து குடும்பத்தவர்கள் கடும் சீற்றம்
namal courts
பெற்றோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நாமலுக்கு பிணை வழங்கவேண்டும் - நீதிமன்றத்தில் அலி சப்ரி
Gotabaya Rajapakasa
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பயணத் தடையை நீக்கும் கோரிக்கை: நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு CIDக்கு உத்தரவு
batti mayi
மயிலத்தமடுவில் மீண்டும் ஒரு பசு சுட்டுக்கொலை! இறைச்சிக்காகப் பசுவை உரித்துக்கொண்டிருந்த மூவர் துப்பாக்கி, கத்தியுடன் தப்பியோட்டம்