கருத்துசுதந்திரம்,ஏனைய அடிப்படை உரிமைகள் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பிற்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை எதிர்ப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடக இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது
சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிட்ட சட்டமூலத்தில் உள்ள ஊடக சுதந்திரம் மற்றும் புலனாய்வு இதழியல் ஆகியவற்றை குற்றச்செயல்களாக கருதுவதற்கு வழிவகுக்க கூடிய ஏற்பாடுகள் குறித்து அதிக கரிசனை கொண்டுள்ளது.
முன்மொழியப்பட்ட சட்டமூலமானது முன்அனுமதி பெறாமல் கடுமையான அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி தகவல்களை அறிக்கை செய்வதை முற்றாக தடை செய்கின்றது.
இதன் காரணமாக அரசஅனுசரணையுடனான குற்றங்கள் பொலிஸ் சித்திரவதைகள் ஊழல் மோசடிகளை வெளிக்கொணரும் புலனாய்வு ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்பதற்கான சட்டபூர்வமான பின்னணியை வழங்ககூடும்.
இது ஊடக சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன் தகவலை பெறுவதற்கான பொதுமக்களின் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
முன்மொழியப்பட்ட இந்த சட்டமூலம் சாதாரண மக்கள் தங்கள் வெளிப்படுத்துவதற்கும் கூட்டுசேர்ந்து அமைப்பாவதற்குமான உரிமைகளை கட்டுப்படுத்த முயல்வதாக தெரிகின்றது
இந்த சட்டமூலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் மற்றும் கடுமையான குற்றம் போன்ற சொற்கள் மிகவும் பரந்த மற்றும் தெளிவற்ற முறையில் வரையறுக்கப்பட்டுள்ளன.
நியாயமான பொருளாதார சமூக கோரிக்கைகளுக்காக விவசாயிகள் மீனவர்கள் தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்யும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் என முத்திரை குத்தப்படும் ஆபத்தை இது உருவாக்குகின்றது என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது
(ரி)