சோமதேவவின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம்- சர்வதேச விசாரணை தேவை-17ம் திகதி செம்மணியில் போராட்டம் – வேலன்சுவாமிகள்

ராஜ்சோமதேவவின் அறிக்கையை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள தவத்திருவேலன் சுவாமிகள் செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணையும் சர்வதேச பிரசன்னமும் அவசியம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

 

இன்றைய தினம் ஏழாம் தேதி சனிக்கிழமை. நல்லூர் சிவகுரு ஆதீனமண்டபத்திலே  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களுடைய ஏற்பாட்டிலே நடைபெற்று முடிந்திருக்கக்கூடிய கலந்துரையாடலானது:

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை வேண்டும்: அண்மையிலே நீதிமன்றத்திலே சமர்ப்பிக்கப்பட்டிருந்த ராஜ் சோமதேவ அவர்களுடைய அறிக்கையை நாங்கள் முற்றும் முழுதாக மறுத்து, எதிர்த்து, கண்டித்து, சர்வதேச நீதியை வேண்டி, வெறுமனே சர்வதேச கண்காணிப்போடு மட்டும் நில்லாமல், முழுமையான ஆரம்பம் முதல் இறுதி நீதி வழங்கப்படும் வரை சர்வதேச விசாரணை, சர்வதேச பிரசன்னம் தேவை என்பதை வலியுறுத்துவது.

புதைகுழி அகழ்வுப் பணி விஸ்தரிப்பு: செம்மணி மனித புதைகுழிகளுடைய அகழ்வு பணியானது வெறுமனே சிந்துபாத்தி இந்துமயானத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் செம்மணியும் செம்மணியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டு இதனுடைய உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.

கண்டனப் போராட்டம்: ஒட்டுமொத்த தமிழர்களாக வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் தழுவிய அளவிலே எதிர்வரும் நவம்பர் மாதம் 17-ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) காலை 10:30 மணிக்கு செம்மணியிலே ஒன்றுகூடி இந்த கண்டனப் போராட்டத்தை நடத்த இருக்கின்றோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினுடைய அழைப்பை ஏற்று இன்று பல அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், பொது அமைப்புகள் என்று பலரும் இன்று இந்த கலந்துரையாடலிலே கலந்துகொண்டிருந்தார்கள். அனைவருடைய கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு இங்கே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

ஏற்கனவே 16-ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த போராட்டமானது, இன்றைய இந்த கலந்துரையாடலின் பின்பு அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை 17ஆம் திகதி காலை 10:30 மணிக்கு என்று மாற்றப்பட்டிருக்கிறது. அனைவரும் வருகை தரக்கூடிய விதத்திலே அந்த திகதியும் நேரமாற்றமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல இந்த போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பான பல்வேறு ஆலோசனைகள், கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டு ஏகமனதான ஒரு ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக இன்றைய கலந்துரையாடல் இருந்திருக்கிறது. ஆகவே இன்று இங்கே வருகை தந்த அமைப்புகளுடைய பிரதிநிதிகள் இங்கே இந்த ஊடக சந்திப்பிலே கலந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் மிகவும் விரைவிலே செல்ல வேண்டியிருந்த காரணத்தினالدான் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

ஆகவே இன்றைய இந்த கலந்துரையாடலிலே தவிர்க்க முடியாத காரணங்களால் பங்குபெற முடியாதவர்கள் அல்லது இந்த அழைப்பு உங்களை வந்து சென்றடையவில்லை என்று கருதக்கூடிய உறவுகள் இந்த ஊடக சந்திப்பு ஊடாக இங்கே பங்குபற்றி இருக்கக்கூடிய அனைத்து அமைப்புக்கள் சார்பிலும் நாங்கள் வேண்டுகோள் விடுப்பது:

எதிர்வரும் 17 ஆம் திகதி இன்னும் பத்து நாட்கள் இருக்கின்றன. இந்த நாட்களிலே எங்களுடைய மக்களுக்கு இந்த செம்மணி மனித புதைகுழிகளுடைய அவசியத்தை உணர்த்தி, மனித எலும்பு கூடுகள், குழந்தைகள், தாய்மார்கள், இளம்பெண்கள் என்று பாரபட்சம் பார்க்காமல், இப்படியான எலும்பு கூடுகளை எங்களுடைய மண்ணிலே கண்டெடுக்கப்பட்ட அந்த எலும்பு கூடுகளுக்கு நீதி வேண்டும், எங்களுடைய உறவுகளுக்கு நீதி வேண்டும் என்ற அடிப்படையிலே நாங்கள் தமிழர் தேசமாக அனைவரும் அணிதிரள வேண்டும்.

இப்பொழுது வந்திருக்கக்கூடிய அநுர அரசு கூட குற்றப் புலனாய்வுத் துறை ஊடாக இந்த வழக்குக்குள்ளே பல திருப்பங்களை ஏற்படுத்தி இருப்பதற்கு ஒரு வெளிப்பாடாகத்தான், ராஜ்சோமதேவ  மிகவும் மோசமான அந்த அறிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆகவே இந்த விடயத்திலே எமது உறவுகள் அனைவரும் ஒன்று திரண்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 17ஆம் திகதி காலை 10:30 மணிக்கு செம்மணியிலே ஒன்று கூட வேண்டும் என்று கேட்டு, சர்வதேச அமைப்புகள் சார்ந்த சர்வதேச சமூகம் நாடுகள் சார்ந்த பிரதிநிதிகளையும் இந்த போராட்டத்திற்கு உங்களுடைய ஆதரவுகளை வெளிப்படுத்தி நிற்குமாறு நாங்கள் அனைத்து அமைப்புகள் சார்பில் அன்போடு கேட்டு நிற்கின்றோம்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

srilankan air
கடுமையான நிதி நெருக்கச்சியை எதிர்கொண்டுள்ளஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
indra11
'இப்போது நான் காரில் இருக்கிறேன், அவருக்கு  எதிரே அமர்ந்துள்ளேன். அவரது சேலையில் இரத்தம், அவரது  நெஞ்சில் இரத்தம்': தனது மாமியார் இந்திரா  காந்திபடுகொலையை நினைவு கூரும் சோனியா காந்தி
Alii_sabir_1200px_02_08_2024
மக்களின் குரல்களுக்குச் செவிமடுப்பது பலவீனமல்ல; அதுவே ஜனநாயக நிர்வாகத்தின் பலமாகும்.-அலி சப்ரி
prageeth1111111111111111
பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை குறித்த நீதிமன்ற விசாரணைகள் - தற்போதைய நிலை என்ன?
Suresh-Sallay
சுரேஷ் சாலே ஆசாத் மௌலானா சந்திப்பு இடம்பெற்ற ஹோட்டல் - விசாரணைகள் தீவிரம்
bec5d639-8910-46b7-8d9c-44bb88e4bce9
போலந்தின் கிராக்கோவ் நகரில் துப்பாக்கி சூட்டு சம்பவம் - ஐவர் பலி
anura may 26
பொதுமக்களுடன் கலந்துரையாடாமல் புதிய சட்டங்களை நிறைவேற்றமாட்டோம் - ஜனாதிபதி
Pubudu-Jayagoda
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அரசு மௌனம் - மதகுருமாருடன் மாத்திரம் பேசுவதில் பலனில்லை – முன்னிலை சோசலி கட்சி
batti land
நீதிமன்றங்களையும் அரச திணைக்களங்களையும் பயன்படுத்தி தமிழ் மக்களின் நில உரிமைகளைப் பறிக்க அநுர அரசாங்கம் முயற்சிக்கிறதா?
basil
நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகாமல் சட்டத்தரணியை முன்னிலைப்படுத்த பசில் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது நீதவான் நீதிமன்றம்