மக்களின் குரல்களுக்குச் செவிமடுப்பது பலவீனமல்ல; அதுவே ஜனநாயக நிர்வாகத்தின் பலமாகும்.-அலி சப்ரி

புதிய சட்டமூலங்களை மக்களுடன் கலந்தாலோசிக்காமல் நிறைவேற்றுவதில்லை என்ற ஜனாதிபதியின் வாக்குறுதியை வரவேற்றுள்ள முன்னாள் அமைச்சர் அலி சப்ரி வாக்குறுதிகளை மாத்திரம் வழங்காமல் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்காக சட்டமூலங்களில் உரிய திருத்தங்களை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தாமதமானலும் சரியான முடிவை எடுப்பது பாராட்டத்தக்கது
முன்மொழியப்பட்ட அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த சட்டமூலத்தையும் விரிவானதொரு உடன்பாட்டிற்கு வரும்வரை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில்லை என்ற முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளார்.
சட்டத்தரணிகள் சமூகம் சிவில் சமூகத்தினர் மற்றும் அனைத்து தரப்பினரும் எழுப்பிய குரலிற்கு கிடைத்த வெற்றி இது.
எனினும் இந்த சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னரே இந்த சட்டமூலங்கள் குறித்த பரந்துபட்ட கலந்தாய்வை மேற்கொண்டிருருக்கவேண்டும். ஆனால் அரசாங்கம் இதனை செய்யாதது அது முதலாம் வாசிப்பிலேயே இந்த சட்டமூலங்களை நிறைவேற்ற தயாராகயிருப்பதை வெளிப்படுத்தியது மேலும் இதற்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்லவேண்டிய தேவையும் காணப்பட்டது.
பயங்கரவாதத்தையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களையும் ஒடுக்க சட்டங்கள் தேவை என்பது குறித்து எந்த விவாதமும் இல்லை.ஆனால் அந்த சட்டங்கள் மக்களின் உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்பதாகயிருக்கவேண்டும்.

மக்களின் குரல்களுக்குச் செவிமடுப்பது பலவீனமல்ல; அதுவே ஜனநாயக நிர்வாகத்தின் பலமாகும்.
தேசிய பாதுகாப்பையும் மக்களின் சுதந்திரத்தையும் சமமாக பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு
இப்போது செய்யவேண்டியது என்னவென்றால் வெறும் வாக்குறுதிகளை மாத்திரம் வழங்காமல் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்காக சட்டமூலங்களில் உரிய திருத்தங்களை செய்வதாகும் என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
(ரி)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

srilankan air
கடுமையான நிதி நெருக்கச்சியை எதிர்கொண்டுள்ளஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
indra11
'இப்போது நான் காரில் இருக்கிறேன், அவருக்கு  எதிரே அமர்ந்துள்ளேன். அவரது சேலையில் இரத்தம், அவரது  நெஞ்சில் இரத்தம்': தனது மாமியார் இந்திரா  காந்திபடுகொலையை நினைவு கூரும் சோனியா காந்தி
prageeth1111111111111111
பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை குறித்த நீதிமன்ற விசாரணைகள் - தற்போதைய நிலை என்ன?
Suresh-Sallay
சுரேஷ் சாலே ஆசாத் மௌலானா சந்திப்பு இடம்பெற்ற ஹோட்டல் - விசாரணைகள் தீவிரம்
velan1
சோமதேவவின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம்- சர்வதேச விசாரணை தேவை-17ம் திகதி செம்மணியில் போராட்டம் - வேலன்சுவாமிகள்
bec5d639-8910-46b7-8d9c-44bb88e4bce9
போலந்தின் கிராக்கோவ் நகரில் துப்பாக்கி சூட்டு சம்பவம் - ஐவர் பலி
anura may 26
பொதுமக்களுடன் கலந்துரையாடாமல் புதிய சட்டங்களை நிறைவேற்றமாட்டோம் - ஜனாதிபதி
Pubudu-Jayagoda
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அரசு மௌனம் - மதகுருமாருடன் மாத்திரம் பேசுவதில் பலனில்லை – முன்னிலை சோசலி கட்சி
batti land
நீதிமன்றங்களையும் அரச திணைக்களங்களையும் பயன்படுத்தி தமிழ் மக்களின் நில உரிமைகளைப் பறிக்க அநுர அரசாங்கம் முயற்சிக்கிறதா?
basil
நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகாமல் சட்டத்தரணியை முன்னிலைப்படுத்த பசில் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது நீதவான் நீதிமன்றம்