ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போனமை குறித்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற அமர்வு (Trial-at-Bar), ஒன்பது பிரதிவாதிகளையும் தங்கள் தரப்பு வாதங்களை அடுத்த வாரம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது; மேலும், வாதங்களைச் சமர்ப்பிக்கச் சொல்லாமல் தங்களை விடுதலை செய்யுமாறு கோரிய பிரதிவாதிகளின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 200(1) பிரிவின் கீழ் ஒன்பது இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை (06) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேல் நீதிமன்ற நீதிபதிகள் நயன செவத்ரத்ன, நலின் ஹேவவசம் மற்றும் லக்மாலி ஹேவவசம் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அரசுத் தரப்பு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கத் தவறிவிட்டதாக வாதிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், பிரதிவாதிகள் தற்காப்பு வாதங்களை முன்வைக்கக் கோராமல் அவர்களை விடுதலை செய்யுமாறு கோரினர். இருப்பினும், சமர்ப்பணங்களைக் பரிசீலித்த பின்னர், பிரதிவாதிகள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அழைக்கப்பட வேண்டும் என மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.
பிரதிவாதிகள் கூண்டிலிருந்து அறிக்கைகளை வழங்குவதன் மூலமாகவோ அல்லது நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதன் மூலமாகவோ தமது சட்டப்பூர்வ உரிமைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் அவர்களுக்கு அறிவித்தது. மேலும், அவர்கள் மௌனமாக இருக்கவும், எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருக்கவும் உரிமை பெற்றுள்ளனர். அதற்கமைய, தற்காப்பு வாதப் பக்கத்தை ஆரம்பிப்பதற்காக வழக்கு நவம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. நவம்பர் 5 ஆம் திகதி அரசுத் தரப்பு வழக்கு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் நீண்ட கால சாட்சியங்கள் சமர்ப்பிக்கும் பணி முடிவுக்கு வந்துள்ளது. எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பில் ஒன்பது இராணுவப் புலனாய்வுப் lஇராணுவபுலனாய்வினருக்கு எதிராக சட்டமா அதிபர் 17 குற்றச்சாட்டுக்களைச் தாக்கல் செய்துள்ளார்.
லங்கா ஈநியூஸ் (Lanka eNews) இணையத்தளத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளரும் அரசியல் கேலிச்சித்திரக் கலைஞருமான எக்னெலிகொட, 2010 ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜனவரி 24, 2010 அன்று காணாமல் போனார். இவரது மனைவி சந்தியா எக்னெலிகொட இவ்வ வழக்கின் மனுதாரர் ஆவார்.
கிளிவெப்ப மற்றும் கிரித்தலெ இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல்ல் ஷம்மி அர்ஜுன குமாரரத்ன மற்றும் எட்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இதில் பிரதிவாதிகளாவர். சதி செய்தல், கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக தடுத்து வைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
முந்தைய நீதிபதிகள் குழுவில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக பல மாதங்களாக வழக்கு நடவடிக்கைகள் தடைபட்டிருந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட நிரந்தர மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுமுன் மே 2026 இல் விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டது. அக்டோபர் மாதத்தில், முன்னாள் அரச புளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஷ் சுரேஸ் சாலியும் இவ் வழக்கில் சாட்சியமளிக்க முப்பீடத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், அரசுத் தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, நான்காவது அரசுத் தரப்பு சாட்சியான முரளி என அழைக்கப்படும் சுமதிபால சுரேஷ் குமார மீண்டும் அழைக்கப்பட்டு மேலதிக சாட்சியங்களை வழங்கினார்.