முன்மொழியப்பட்டுள்ள அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் சர்வதேச மனித உரிமை சட்டத்திற்கு ஏற்ப காணப்படுவதை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் அதில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என ஐக்கியநாடுகளின் மனித உரிமை நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கையில் 26 வருடங்களாக இடம்பெற்ற கொடுரமான உள்நாட்டு போருக்கு முன்னரும் போரின் போதும் அதன் பின்னரும் சிறுபான்மையினர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் மீதான துஸ்பிரயோகங்கள் உட்பட சித்திரவதைகள் காணாமலாக்கப்படுதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த 1979ம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கின்றோம்.
இலங்கை அரசாங்கம் அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தின் மிகவும் மேம்படுத்தப்பட்ட வரைபை சமர்ப்பித்துள்ளது எனினும் இன்னமும் தீர்வு காணப்படவேண்டிய கரிசனைகள் உள்ளன.
இராணுவமீறல்களின் கடந்த கால வரலாற்றை கருத்தில்கொண்டும் மனித உரிமை துஸ்பிரயோகங்களை தடுப்பதற்காகவும் ஆயுதபடையினருக்கு கைதுசெய்வதற்கான அதிகாரத்தை வழங்குவதை கைவிடவேண்டும் அவ்வாறான அதிகாரங்களை நீக்கவேண்டும்.
மேலும் பயங்கரவாத குற்றங்களை தடுப்பதற்கான அதிகாரங்கள் இறுக்கமாக்கப்பட்டு நீதித்துறை மேற்பார்வைக்கு உட்படுத்தப்படவேண்டும்.
அமைப்பொன்றை தடை செய்வதற்கான அளவுகோல்கள் வரையறைகள் தெளிவுபடுத்தப்படவேண்டும் .
சித்திரவதை அல்லது அதனையொத்த நடைமுறைகள் மூலம் பெறப்பட்ட அனைத்து சாட்சியங்களும் வாக்குமூலங்களும் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலக்கப்படவேண்டும்.தடுப்புக் காவல் உத்தரவுகள் உடனடி மற்றும் பயனுள்ள நீதித்துறை சார்ந்த கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டும்
“சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை வழிநடத்துவதற்கான ஜனாதிபதியின் அதிகாரம் வரையறுக்கப்பட வேண்டும்
என அவர்கள் தெரிவித்துள்ளனர்