அப்பாவின் பாதுகாப்பிற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்அப்பாவின் இறுதிச்சடங்கிற்கு  நான் வர வேண்டியிருக்கும்”: ராகுலின் எச்சரிக்கையை நினைவுகூர்ந்தார் சோனியா காந்தி

தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட அந்த சோகமான மாலையைச் சோனியா காந்தி தனது “பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்” (Belonging: A Journey of Love) என்ற சுயசரிதை நூலில் நினைவுகூர்ந்துள்ளார்.

மே 21, 1991 அன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது சோனியா காந்தியின் உலகம் நொறுங்கி விழுந்தது. அந்த வேளையில், அவரது மகன் ராகுல் காந்தி முன்னரே கூறிய பயங்கரமான எச்சரிக்கை அவரது நினைவில் எதிரொலித்தது.

“அப்பாவின் பாதுகாப்பிற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், விரைவில் அவரது இறுதிச்சடங்கிற்குத்தான் நான் திரும்பி வர வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும்,” என்று இந்தச் சம்பவத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தியுடன் பயணம் மேற்கொண்டிருந்த போது ராகுல் தனது தாயாரிடம் கூறியிருந்தார்.

தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட அந்தச் சோகமான மாலையைச் சோனியா காந்தி தனது “பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்” என்ற சுயசரிதை நூலில் விவரித்துள்ளார். மாலை அணிவிப்பது போல் நடித்த ஒரு பெண் தனது உடலில் கட்டியிருந்த வெடிமருந்துகளை வெடிக்கச் செய்ததில், முன்னாள் பிரதமரும் அவருக்கு அருகில் இருந்த 14 பேரும் உயிரிழந்தனர்.

“புதிய அச்சுறுத்தல் மதிப்பீட்டின் மூலம் மாற்றம் தேவைப்பட்டால் ஒழிய” சிறப்புப் பாதுகாப்புப் படை (SPG) பாதுகாப்பு தொடர வேண்டும் என்று டிசம்பரில் ஒரு குழு கூடி முடிவெடுத்தபோதிலும், வி.பி.சிங் அரசாங்கத்தால் ராஜீவ்காந்தியின் SPG பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டு ஓராண்டுக்கும் சற்று அதிகமான காலத்திற்குப் பிறகே ராஜீவ்காந்தியின் உயிருக்கு எதிரான இறுதித் தாக்குதல் நடத்தப்பட்டது என்று தனது வாழ்க்கை வரலாற்று நூலில் சோனியா காந்தி எழுதியுள்ளார்.

“அத்தகைய எந்தவொரு மறுஆய்வும் மேற்கொள்ளப்படவே இல்லை. அடுத்த மாதமே வி.பி.சிங் அரசாங்கத்தால் SPG பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. முழு அமைப்பிலும் மிக நெருக்கமான பாதுகாப்பை வழங்கப் பயிற்சி பெற்ற ஒரு சிறப்புப் படைக்குப் பதிலாக உள்ளூர் பொலிஸார் நியமிக்கப்பட்டனர்” என்று சோனியாகாந்தி எழுதியுள்ளார்.

அவர் அந்த நாளை மற்ற நாட்களைப் போலவே நினைவில் வைத்துள்ளார். ராஜீவ் வெளியே செல்லும் போதெல்லாம் அவரது கட்டிலின் பக்கத்தில் ஒரு “ஆறுதல் உணர்வை” சோனியா கண்டடைவார். பிரியங்கா ஒரு நண்பரின் பிறந்தநாள் விழாவிற்குச் செல்ல தனது அறையில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். ராகுல் அமெரிக்காவில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.

“திடீரென்று என் அறையை நோக்கி ஓடிவரும் காலடிச் சத்தங்களை நான் கேட்டேன். வீட்டில் வேறு யாரும் இல்லை; அது அவளாகத்தான் இருக்க முடியும். அவள் தடுமாறுவது போல் எனக்குத் தோன்றியது, பின்னர் காலடிச் சத்தம் என்  கதவருகேதிடீரென்று நின்றது. நான் என் புத்தகத்தை மூடிவிட்டு, அசௌகரிய உணர்வுடன் கவனித்தேன்.”

“கதவு திறந்தபோது, அவள் மெதுவாக உள்ளே நுழைந்தாள், அவளது அடிகள் நிதானமாக இருந்தன. என்னை நோக்கி வரும்போது அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, கட்டாய அமைதியுடன் நகர்வது போல் தெரிந்தது. ஆனால் அவளது மூச்சு வேகமாகவும் ஆழமின்றியும் இருந்தது, அவளது முகத்தில் இரத்தம் வற்றிப் போயிருந்தது, அவளது கண்கள் நான் இதுவரை பார்த்திராத அளவிற்கு இருண்டிருந்தன,” என்று சோனியாகாந்தி தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

பிரியங்கா ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், குண்டுவெடிப்பு ஏற்பட்டதாகவும், மக்கள் இறந்துவிட்டதாகவும் கூறி, சென்னைக்குச் (மெட்ராஸ்) செல்லத் தயாராகுமாறு தாயை வற்புறுத்தினார். அதில் சிறிய விஷயம் மட்டுமே காந்திக்கு புரிந்தது.

“அவள் என்ன சொல்கிறாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, அவள் வேகமாகப் பேசினாள், எதுவும் புரியவில்லை. ஏன் சென்னை? ராஜீவ் சென்னையில் இருந்தாரா? என்ன குண்டு? பிரியங்காவின் வார்த்தைகளை விட அவளது குரலில் இருந்த அச்சமே, அவள் உண்மையில் என்ன சொல்ல வருகிறாள் என்பதை உணர வைத்து என்னை உறைய வைத்தது. என்னால் மூச்சு விட முடியவில்லை. நான் எழுந்து நின்றேன், அவள் முன்னே வந்து என்னை தன் கைகளில் அணைத்துக் கொண்டாள். என் நெஞ்சில் அவளது இதயம் வேகமாக அடித்துக் கொள்வதை என்னால் உணர முடிந்தது,” என்று அவர் எழுதுகிறார்.

Belonging by Sonia Gandhi: 9780593803592 | PenguinRandomHouse.com: Books

அடுத்த சில நிமிடங்கள் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதிலேயே கழிந்தன. சோனியாகாந்திக்கு இந்தச் செய்தியின் பாரம் உறைப்பதற்கு முன் கட்சித் தலைவர்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் பல தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்டன.

“நான் என் மகளின் கரங்களில் சுருண்டு விழுந்தேன். ‘நான் அவருடன் போயிருக்க வேண்டும்’ என்று மீண்டும் மீண்டும் அலறினேன். ‘நான் ஏன் அவருடன் போகவில்லை?’ அவள் எதுவும் சொல்லவில்லை. நம்பிக்கையின்மையை மீறி, நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு, நானே திரு. ஜார்ஜை அழைத்தேன். ‘உண்மையை மட்டும் சொல்லுங்கள், அது நிஜம்தானா?’ அவரது குரல் தளுதளுத்தது. ‘ஆம் அது உண்மைதான், சாஹப் (ராஜீவ்) இனி இல்லை.’ என் உலகம் இருண்டுவிட்டது போலவும், அந்த இருள் என்னை முழுமையாக விழுங்கிவிட்டது போலவும் உணர்ந்தேன்.”

அந்த நேரத்தின் பல விவரங்களின் நினைவுகள் “தெளிவற்றதாக” இருந்தாலும், ஊழியர்கள் தாழ்வாரத்தில் அழுது புலம்புவதையும், “உடைந்திருந்தாலும் நிதானமாக இருந்த” ஒரு மகளையும் காந்தி நினைவுகூர்ந்தார்.

“நீண்ட நேரத்திற்குப் பிறகே, சில தருணங்கள் என் நினைவுக்கு வந்தன, ஆனால் இன்றுவரை இங்குள்ள எனது சொந்த நினைவுகள் என் மகளாலும் பிறராலும் எனக்குக் கூறப்பட்டவற்றுடன் கலந்துவிட்டன. ஊழியர்கள் குழுவாகக் கூடி, அழுவதையும், அவர்களின் முகங்களில் கண்ணீர் வழிவதையும், குழந்தைகளின் பராமரிப்பாளர் ஓங்மு உரக்கப் புலம்புவதையும் நான் பார்த்தேன். நான் பின்வாங்கினேன்; என் தலை சுற்றியது. என் கால்களை என்னால் உணர முடியவில்லை. நான் விழப் போனேன். பிரியங்கா என்னைப் பார்த்து, தாங்கிப் பிடித்து தன் அறைக்கு அழைத்துச் சென்று, தன் கட்டிலில் உட்கார வைத்தாள்.”

“ராஜீவின் அன்பு மகள் உடைந்திருந்தாலும் நிதானமாக இருந்தாள். பிரியங்கா என் முன்னால் அழவே இல்லை, ஒருமுறை கூட அழவில்லை. அவள் எல்லாவற்றையும் பொறுப்பேற்றுக் கொண்டாள், தன் அறைக்கும் ராகுலின் அறைக்கும் இடையே வேகமாகச் சென்றாள். அங்கிருந்து தன் தாயின் வேதனையைக்  எதையும் கேட்காதவாறு அவளால் தடையை ஏற்படுத்த முடிந்தது. அவள் தொலைபேசி அழைப்புகளைச் செய்து கொண்டிருந்தாள், யாரோ ஒருவருடன் வாதிட்டாள்: ‘அவரைத் திரும்பக் கொண்டு வரும் விமானத்திலேயே எங்களை வர அனுமதியுங்கள். தயவுசெய்து. நீங்கள் எங்களை அனுமதிக்காவிட்டால், நாங்கள் சொந்தமாக ஏற்பாடு செய்வோம்,’ என்று அவள் உறுதியாகக் கூறினாள். ‘ஆனால் நாங்கள் வருவோம்’,” என்று காந்தி நினைவுகூர்கிறார்.

அவரது உடலின் எஞ்சிய பாகங்கள் டெல்லியிலுள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது, “ஒரு தருணம், ஒரு வார்த்தை, ஒரு அன்பான பார்வை” நினைவுக்கு வர, தன் தாயைப் போலவே ராஜீவும் தனது கண்களைத் தானம் செய்திருந்தார் என்பது நினைவுக்கு வந்ததால், ராஜீவைப் பார்க்க வேண்டும் என்ற பலமான எண்ணம் சோனியாவுக்கு ஏற்பட்டது.

“அவரது விருப்பத்தை யாராவது ஒருவரிடம் சொல்ல வேண்டும். விபத்து காலங்களில் எப்போதும் எங்களுடன் இருக்கும் எங்கள் குடும்ப மருத்துவரைப் பற்றி நினைத்தேன். ‘டாக்டர் மாத்தூர் இங்கு இருக்கிறாரா?’ என்று கேட்டேன். ‘நான் அவரிடம் உடனடியாகப் பேச வேண்டும், இப்போது அது முக்கியம்.’ அந்த மருத்துவரின் கசப்பான பதில் ‘ (கண்களா? என்ன பேசுகிறீர்கள், அங்கு எதுவுமே மிஞ்சவில்லை, எதுவுமே இல்லை!) எனக்கு வயிற்றைப் பிரட்டும் அளவிற்குக் கடுமையான அடியைக் கொடுத்தது, அது என்னை வாந்தி எடுக்க வைத்தது. என்னால் மூச்சு விட முடியவில்லை. நான் இறந்துவிட விரும்பினேன்,” என்று அந்தப் புத்தகம் கூறுகிறது.

ஒருவழியாக ராகுலைத் தொடர்புகொள்ள முடிந்தது.

“ஒரு நண்பர் அவரை அழைத்து, ‘புரி கப்ர் ஹை’ (கெட்ட செய்தி) என்று கூறினார், அவர் உடனடியாக, ‘அப்பா இறந்துவிட்டார், அல்லவா?’ என்று பதிலளித்தார். நான் அவரை இறுகக் கட்டிப்பிடிக்கிறேன். அவரது பயணத்திட்டத்தில் எந்தத் தடங்கலும் இல்லையென்றால், அவர் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவின் பக்கத்திலேயே இருந்திருப்பார். இப்போது அவர் தன் தந்தையின் உடலின் எஞ்சிய பாகங்கள் அருகே அசையாமல் நிற்கிறார்,” என்று காந்தி நினைவுகூர்கிறார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Rambewa-accident-5
ரம்பேவ பேருந்து விபத்து -மூன்று ஆண்கள் உட்பட நால்வர் பலி – 76பேர் மருத்துவமனைகளில் - பலருக்கு எலும்பு முறிவு தலைக்காயங்கள்
nishantha
தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் நிசாந்த ரணதுங்க கைது – அரசநிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு
899353484_1134206172333435_4712077817965227141_n
மாமனிதர் நடராஜா ரவிராஜின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில்
matala mass 1
மாத்தளை மனித புதைகுழி விசாரணை 11ம் திகதி-காணாமலாக்கப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் நீதிமன்றத்தின் முன்பாக ஒன்றுகூடவுள்ள உறவுகள்
ajith dhar house
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பல விடயங்களை அம்பலப்படுத்திய பொலிஸ் அதிகாரியின் வீட்டின் மீது தாக்குதல்
gajendra
சட்டவிரோத தையிட்டி விகாரையில் மத நிகழ்வுகளை அநுர அரசாங்கம் ஊக்குவிக்கிறது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு
no psta
"மக்கள்செல்வாக்குச் சர்வாதிகாரத்தை நோக்கிய இலங்கையின் நகர்வு
Anuradhapura-accident
விபத்தில் சிக்கியது யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து – ஐவர் பலி
psta no15
புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலத்தில் திருத்தங்கள் அவசியம் - படையினருக்கு கைதுசெய்வதற்கான அதிகாரத்தை வழங்ககூடாது – ஐநா நிபுணர்கள் வேண்டுகோள்
drones
 ட்ரோன் இறக்குமதியை நியாயப்படுத்தி நளின் பண்டாரகருத்து- ; அது ஒரு அனுமதிப் பத்திரப் பிரச்சனை மட்டுமே என விளக்கம்