பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்திய உளவுத்துறையை சேர்ந்தவர் எனவும் தற்போதைய அரசாங்கம் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுவதாகவும் கஸ்ஸப்ப தேரர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் புனித நகர அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்த கஸ்ஸப்ப தேரர் நேற்று வேறு இரு மதகுருமாருடன் இணைந்து ருவான் வெலிசாயாவிற்கு அருகில் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக சிறைசெல்லவும் உயிரை தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றேன்.
தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜேவிபியை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்திய நலன்களையே முன்னெடுத்து செல்கின்றார்
குடும்பமோ பிள்ளைகளோ இல்லாத பெண் எப்படி நாட்டை பற்றி சிந்திக்க முடியும்?
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க இந்திய அரசாங்கத்தின் கைம்பொம்மைஇ இந்திய பிரதமரின் விருப்பத்திற்கு இணங்க இலங்கையின் கலாச்சார பாரம்பரியத்தினை சூறையாடும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது அனுராதபுரம் புனித நகரம் தொடர்பான வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள கலாச்சார சூறையாடலை என்னால் பக்கம்பக்கமாக மக்களுக்கு தெளிவுபடுத்த முடியும்.
காலையில் இலங்கையிலிருந்தும் மாலையில் இந்தியாவிடமிருந்தும் சாப்பிடும் துரோக ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டிற்கு சிறந்ததொரு எதிர்காலத்தினை எதிர்பார்க்க முடியுமா என கஸ்ஸப்ப தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.