ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க இன்று சமர்ப்பிக்கவுள்ள 2027ம் ஆண்டிற்கான வரவு செலவுதிட்டத்தை நலன்புரித்திட்டங்கள் உதவிகள் அல்லது வரிச்சலுகைகளை அடிப்படையாக கொண்டுமாத்திரம் பொது மக்கள் மதிப்பிடக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ள பிரதிநிதியமைச்சர் அனில்ஜயந்த மாறாக வரவு செலவுதிட்டம் எட்டவிரும்பும்மாற்றத்தையும் அதன் ஒட்டுமொத்த பொருளாதார பாதையையும் கருத்தில் கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
பிரதிநிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது
வரவு செலவுதிட்ட முன்மொழிவுகள் பொருளாதாரத்தை மாற்றியமைக்க,உற்பத்தியை விரிவாக்க தரமான முதலீடுகளை ஈர்க்க,மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் என்பதிலேயே அதன் உண்மையான முக்கியத்துவம் அடங்கியுள்ளது.
முதல் இரண்டு வரவு செலவுதிட்டங்களும் நாட்டின் பொருளாதார சவால்களுக்கு தீர்வை காண்பதிலும் பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்தின.
பொருளாதார ஸ்திரதன்மையை அடைவதில் முன்னேற்றம் கண்டுள்ள அரசாங்கம் தற்போது பொருளாதார விரிவாக்கம் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களை நோக்கி நகரமுற்படுகின்றது.
வரவுசெலவுதிட்டத்தில் நலன்புரி நடவடிக்கைகள் ஏனைய நன்மைகள் மற்றும் சாத்தியமான வரிசலுகைகள் காணப்படும் ஆனால் இருப்பினும் இந்த முன்மொழிவுகள் மதிப்பிடப்படும் ஒரே அளவுகோலாக அது இருக்ககூடாது
தற்குப் பதிலாக வரவு செலவுத் திட்டத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் பொருளாதாரத்தை கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் இலங்கையை மேல்-மத்திய வருவாய் நாடு ( என்ற அந்தஸ்தை நோக்கி நகர்த்துவதற்கும் நிதி வளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதையும் ஆராய வேண்டும்
தெளிவாக அடையாளம் காணப்பட்ட நடவடிக்கைகள் மூலோபாய முதலீடுகள் மற்றும் நிதி வளங்களை திறம்பட ஒதுக்குவதன் மூலம் பொருளாதார மாற்றம் படிப்படியாக நடக்கும்
அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணைகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ள 2027 வரவு செலவுத் திட்டமானது மக்களுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும் என நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த நம்பிக்கை வெளியிட்டார்