இந்தியாவுடனான விசேட மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவதற்கான கொழும்பின் அர்ப்பணிப்பை மீண்டும் வெளியிட்டுள்ள இலங்கையின் எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச
இது இலங்கையின் வெளிவிவகார கொள்கை பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சிகளிற்கு முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய நாடுகளுடன் ஆக்கபூர்வமான உறவை பேணும் அதேவேளை புதுடில்லியுடனான நெருங்கிய உறவுகளை வளர்த்தெடுப்பதை எதிர்கட்சி விரும்புவதாக அவர் ஏஎன்ஐக்கு தெரிவித்துள்ளார்.
ஒரு கட்சியாக பிரதான எதிர்கட்சியாக நாங்கள் இந்தியாவுடன் விசேட உறவுகளை விசேட மூலோபாயரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை பேணவேண்டும் என நம்புகின்றோம்,இந்தியாவுடனான உறவு விசேடமானது என அவர் தெரிவித்துள்ளார்.