இஸ்ரேலில் மூன்று இலங்கை தொழிலாளர்கள் தாக்குதலிற்குள்ளாகியுள்ளனர் எனஇஸ்ரேலிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதான இரசாயன திரவ தாக்குதல்கள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தனிமையான பகுதிகளில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது சிறிய குழுவினர் இரசாயனம் கலந்த திரவ தாக்குதலில் ஈடுபடுவதாக வெளியான வீடியோக்கள் சமூக ஊடக பதிவுகளை கருத்தில் எடுத்துள்ளதாக இஸ்ரேலிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
தனியாக நடமாடும் நபர்களை இலக்குவைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,மூன்று இலங்கையர்கள் தாக்கப்பட்டுள்ளனர் அவர்கள் இது குறித்து தூதரகத்திற்கு தெரிவித்துள்ளனர் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிற்கான இலங்கை தூதரகம் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.