ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க இன்றைய தனது வரவு செலவுதிட்ட உரையில் வெளியிட்டார்
நாடாளுமன்றத்தில் இன்று வரவுசெலவுதிட்டத்தினை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க ஊழலிற்கு எதிரான நடவடிக்கைகளை ஏதேச்சதிகாரம் என எதிர்கட்சியினர் தெரிவிப்பதை கடுமையாக விமர்சித்தார்.
ஊழலிற்கு எதிரான தனது நடவடிக்கைகளை ஏதேச்சதிகாரம் என தெரிவிப்பதை முழுமையாக நிராகரித்த ஜனாதிபதி அச்சம் பாகுபாடின்றி சட்டத்தை அமுல்படுத்தவதற்கான தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
குற்ற இலாபச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது,பிரதிபொலிஸ்மா அதிபர் தலைமையில் பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது,என தெரிவித்த ஜனாதிபதி ஆனாலும் சிலர் ஹிட்லர் மீண்டும் வந்துவிட்டார் என்கின்றனர்,என தெரிவித்த ஜனாதிபதி சிலர் ஹிட்லரை தோற்கடிப்பதற்காக அமெரிக்கா ரஸ்யாவுடன் இணையவேண்டும் என்கின்றனர் ,என தெரிவித்தார்
பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து நீங்கள் ரஸ்யாவா அமெரிக்காவா என கேள்வி எழுப்பினார்.
ஹிட்லரை தோற்கடிப்பதற்காக அமெரிக்காவும் ரஸ்யாவும் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணி நெருக்கடியான யுகத்தில் உலக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அதனை இன்றைய அரசியலுடன் ஒப்பிடுவது வேடிக்கையான விடயம்,நீங்கள் வரலாற்றை சரியான சூழமைவில் விளங்கிக்கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.
மனதில் வைத்துக்கொள்ளுங்கள்,நாங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்,நீங்கள் எவ்வாறு அர்த்தப்படுத்தினாலும் சரி,ஒருவர் மக்களிற்கு தவறிழைத்தால் அவர் யாராகயிருந்தாலும் சரி என்ன பதவியில் இருந்தாலும் சரி,அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
