2026க்கான பாதீட்டில் 455 பில்லியன்கள் பாதுகாப்புச் செலவீனதுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 உடன் ஒப்பிடும் போது 12 பில்லியன் ரூபாய்களால் இது அதிகரித்துள்ளது. என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தனது சமூக ஊடக பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
2026க்கான பாதீட்டில் 455 பில்லியன்கள் பாதுகாப்புச் செலவீனதுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 உடன் ஒப்பிடும் போது 12 பில்லியன் ரூபாய்களால் இது அதிகரித்துள்ளது. யாழ் விமான நிலையத்துக்கு ஒரு பில்லியன் ஒதுக்கி இருப்பதாக ஆர்ப்பரிக்கும் தோழர்கள் இந்த அநியாயத்தைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.
350000க்கு மேல் படையினரனையும் தேவையற்ற படைத்த்ளங்களையும் வைத்து மொத்த பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பையும் மொத்த செலவீனத்தின் 10% அளவில் பாரிய பகுதியாகவும் உள்ள இந்த விடயம் தான் முதலில் கட்டுப்படுத்த வேண்டியது.
ஆனால் நடந்து போனேன், பஸ்ஸில் நின்று போனேன் இப்படியெல்லாம் நாட்டின் செலவைக் குறைக்கின்றேன் என்று ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் இவர்கள் இந்த மோசமான ஒதுக்கீடு பற்றி இரண்டாவது வருடமும் கண்டுகொள்ளவில்லை.
