இனப்படுகொலையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிராக துருக்கி பிடியாணையை பிறப்பித்துள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் உட்பட 30 அதிகாரிகளுக்கு எதிராகவும் துருக்கி பிடியாணையை பிறப்பித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் திட்டமிட்டு இனப்படுகொலையில் ஈடுபட்டது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்தது என துருக்கி குற்றம்சாட்டியுள்ளது.
துருக்கி பாலஸ்தீன நட்புறவு மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுவீசியதையும் துருக்கி சுட்டிக்காட்டியுள்ளது.
