ஏற்றுமதியை அடிப்படையாக கொண்ட முதலீடு, முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கை , டிஜிட்டல் மயப்படுத்தல்- வரவுசெலவுதிட்டத்தின் முன்மொழிவுகளை வரவேற்கின்றது ஆடைதொழில்துறை அமைப்பு

அரசாங்கத்தின் 2026ம் ஆண்டிற்கான வரவுசெலவுதிட்டத்தினை வரவேற்றுள்ள கூட்டு ஆடை சங்க மன்றம் The Joint Apparel Association Forum (JAAF)வரவுசெலவுதிட்டத்தில் ஏற்றுமதியை அடிப்படையாக கொண்ட முதலீடு,பேரினப்பொருளியல் ஸ்திரதன்மை ஆகியவற்றிற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளதையும் வரவேற்றுள்ளது.

இலங்கை பொருளாதாரத்தின் வெளிநாட்டு ஏற்றுமதி துறையை வலுப்படுத்துவதை முதலீட்டாளர்களின நம்பிக்கையை வலுப்படுத்துவதை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஆடை தொழில்துறை அமைப்பு அதேவேளை உத்வேகத்தை தக்கவைப்பதற்கு சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி வருமானத்தை உழைக்கும் துறையான ஆடைஏற்றுமதி தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கல்,வர்த்தக வசதிகள் மீதான புதுப்பிக்கப்பட்ட கவனம்,அதிகரித்தமூலதன கொடுப்பனவுகள் ஆகியவற்றை போட்டித்தன்மையை மேம்படுத்தவும்,மிகவும் அவசியமான வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவருவதற்கான சாதகமான நடவடிக்கையாகவும் கருதுவதாக தெரிவித்துள்ளது.

எனினும் இந்த முன்மொழிவுகளை உறுதியான நடவடிக்கைகளாக மாற்றுவதற்கு கொள்கை செயற்படுத்தலும் தொடர்ச்சியும் மிக முக்கியம் என ஆடைதொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
Online1 loan
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து