ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள வரவுசெலவுதிட்டம் 2026 உத்தேச கல்விசீர்திருத்தத்தை முன்னெடுப்பதற்கான கல்விஅமைச்சினதும் அதன் நிறுவனங்களினதும் நம்பிக்கைய வலுப்படுத்தியுள்ளது என பிரதி கல்வியமைச்சர் மதுரசெனிவிரட்ண நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கல்விக்கு 300 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது இதில் 133.9 பில்லியன் உயர் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகரிக்கப்பட்டுள்ள நிதி காரணமாக எங்களால் தற்போது நம்பிக்கையுடன் கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் குறிப்பாக ஆண்டு ஒன்று முதல் ஏழுவரை பாடவிதானத்தை நவீனமயப்படுத்துவதற்கு உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடவிதானத்தை நவீனமயப்படுத்துவதற்கு வகுப்பறை உள்கட்டமைப்பில் முன்னேற்றங்களை செய்யவேண்டும்,டிஜிட்டல் மாற்றங்களை செய்யவேண்டும்,ஆசிரியர்களிற்கு பயிற்சிகளை வழங்கவேண்டும் ஒட்டுமொத்த மாற்றத்தை செய்யவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
