திட்டமிடல் இன்மைமோசமான உள்கட்டமைப்பு மற்றும் பெரும்பாலும் பொழுதுபோக்கு வசதிகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் ஆசிய பிராந்தியத்தில் தாய்லாந்து மற்றும் போட்டிநாடுகளை நெருங்க முடியாத நிலையில் இலங்கை உள்ளது என
சுற்றுலாத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையைப் போலவே கிட்டத்தட்ட அதே வானிலை மற்றும் இயற்கை வளங்களைக் கொண்ட தாய்லாந்து ஆண்டுக்கு 30 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாபயணிகளை ஈர்க்கிறது ஆனால் இலங்கை இன்னும் மூன்று மில்லியனைத் தாண்ட போராடி வருகிறது’ என்று சுற்றுலாத்துறையை சேர்ந்தர் கமல் பிரசங்கித் பெரேரா கூறினார்.
கடந்த ஆண்டு தாய்லாந்து சுமார் 32.4 மில்லியன் சர்வதேச பார்வையாளர்களை ஈர்த்தது இருப்பினும் இது முந்தைய கணிப்புகளை விடக் குறைவு மற்றும் முந்தைய ஆண்டின் மீட்சியை விடக் குறைவு.2025 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் சுமார் 33.1 மில்லியனாக இருந்தன இது 2024 இல் பதிவு செய்யப்பட்ட 35.5 மில்லியனை விடக் குறைவு.

நாங்கள் சுற்றுலாத்துறை குறித்து நிறைய பேசுகின்றோம் கவர்ச்சிகரமான சுலோகங்களை முன்வைக்கின்றோம்,சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க குழுக்களை நியமிக்கின்றோம்,அதிகாரிகளுக்கு அதிக ஊழியத்தை வழங்குகின்றோம் ஆனால் ஆனால் ஏனைய நாடுகள் பாரிய முன்னேற்றத்தை இந்த துறையில் கண்டுள்ள போதும் எங்களால் அந்தளவிற்கு செல்ல முடியவில்லை என பெரேரா தெரிவித்தார்
இலங்கையில் தீம்பார்க்குகள் இல்லை,ஸ்னோர்கெலிங், ஸ்கூபாடைவிங் போன்றவை இல்லை இலங்கை கடற்கரைகள் நிறைந்த நாடு என்ற போதிலும் ஆடம்பர கப்பல்கள் இல்லை என அவர் தெரிவித்தார்
மாலைதீவுஆண்டுதோறும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது என்று உள்வரும் சுற்றுலா நடத்துனர் ஜகத் விதனகே கூறினார்.
எங்களிடம் மிகப்பெரிய தவறு அல்லது பிழை உள்ளது வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று பில்லியன் சுற்றுலாப்பயணிகளிற்கு மேல் எங்களால் ஈர்க்க முடியாமல் உள்ளது என தெரிவித்த ஜகத் விதானகே இலங்கை போன்ற நீர்வீழ்ச்சிகள் மலைகள் மழைக்காடுகள் கடலோரங்கள் கடற்கரைகள் செழிப்பான பாரம்பரியம் போன்ற எதுவுமற்ற சிங்கப்பூரிடமிருந்து இலங்கை பாடம் கற்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.
சுருக்கமாகச் சொன்னால், மோசமான சாலைகள் மற்றும் குறைந்த தரமான தங்குமிடம், பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் பற்றாக்குறை மற்றும் சுற்றுலா சேவைகளின் நிலைத்தன்மை மற்றும் தரத்தில் உள்ள சிக்கல்கள், ஆக்ரோஷமான விளம்பரதாரர்கள் மற்றும் வரவேற்கத்தக்க சூழல் இல்லாதது போன்ற வளர்ச்சியடையாத சுற்றுலா உள்கட்டமைப்பு காரணமாக பிராந்திய போட்டியாளர்களை விட அதிகமான பயணிகளை ஈர்ப்பதில் இருந்து இலங்கை பின்தங்கியுள்ளது என்றுசுற்றுலாத்துறையை சேர்ந்தவர்கள்தெரிவிக்கின்றனர். . பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அதிக வரிகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில் அதன் நற்பெயரை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஆகியவை பிற காரணிகளாகும்.
