வரவுசெலவுதிட்டம் கண்ணிற்கு தெரியாத விதத்தில் தந்திரமாக மக்கள் மீது அழுத்தங்களை திணித்துள்ளது- சாகர காரியவசம்

ஜனாதிபதி பொருளாதார வளர்ச்சி குறித்து தனது வரசெலவுதிட்ட உரையில் குறிப்பிட்டிருந்தாலும் உண்மையில் அதற்காக வழிமுறை அல்லது நிதி ஒதுக்கீடு எதனையும் அவர் முன்மொழியவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மதிப்பு கூட்டப்பட்ட சமூக பங்களிப்பு வரிக்கான வருடாந்திர வருமான வரம்பை 60 பில்லியனில் இருந்து 30 பில்லியனாக குறைப்பது போன்ற முன்மொழிவுகள் மூலம் வரவுசெலவுதிட்டம் கண்ணிற்கு தெரியாத விதத்தில் தந்திரமாக மக்கள் மீது அழுத்தங்களை திணித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் இதனை உடனடியாக புரிந்துகொள்ள மாட்டாhகள் என தெரிவித்துள்ள அவர் இந்த குறைப்பின் மூலம் 60 மில்லியன் உழைக்கும் பெரிய அளவிலான வர்த்தகர்கள் மாத்திரமின்றி 36 மில்லியன் உழைப்பவர்களும் வரிவிதிப்பிற்குள்ளாவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

வரிச்சுமை மீண்டும் மக்கள் மீது விழும் என தெரிவித்துள்ள அவர் வரி மாத்திரம் ஒரு முன்னேற்றமாக இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் ஏற்றுமதி பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் பட்ஜெட் உரையில் திட்டங்கள் இல்லை. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான செயல் திட்டமும் கோடிட்டுக் காட்டப்படவில்லை.

பட்ஜெட்டில் டிஜிட்டல் துறையை மேம்படுத்துவது குறித்தும் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நிதி ஒதுக்குவது குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இரு தொழில்களையும் எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கான வழிமுறையை அது விளக்கவில்லை மேலும் அவற்றின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கான வழிமுறைகள் மற்றும் செயல் திட்டங்களை கோடிட்டுக் காட்டத் தவறிவிட்டது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்