வெள்ளை மாளிகை நிகழ்வின் போது டிரம்ப் உறங்கினாரா? சமூக ஊடகங்களில் பரவும் படங்கள்

ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கண்களை மூடி உறங்க முயல்வதை காண்பிக்கும் படம் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றது.
டிரம்பின் அரசியல் எதிரிகள் அந்த படத்தை அடிப்படையாக வைத்து டிரம்பின் பணிதிறன் குறித்து கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

வியாழக்கிழமை பிரபலமான எடை இழப்பு மருந்துகளுக்கான விலைகளைக் குறைப்பது குறித்த அறிவிப்பில் டிரம்ப் பங்கேற்று மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து ரெசலூட் டெஸ்க்கின் பின்னால் இருந்து கருத்;துவெளியிட்டார்
சில சமயங்களில் டிரம்பின் கண்கள் மூடியதாகத் தோன்றியது சில சமயங்களில் அவற்றைத் திறந்து வைத்திருக்க அவர் சிரமப்படுவது போல் தோன்றியது. அவர் கண்களை சில இடங்களில் தேய்த்தார்.


இந்தப் படங்கள் டிரம்பின் விமர்சகர்களிடமிருந்து விரைவான விமர்சனங்களைப் பெற்றன. ஜ கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசமின் ஊடகப்பிரிவுநிகழ்வின் படங்களை வெளியிட்டு “டோஸி டான் திரும்பிவிட்டார்” என்று எழுதியது

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் -சிஎன்என்னிற்கு வழங்கி அனுப்பியுள்ள அறிக்கையில் “ஜனாதிபதி தூங்கவில்லை; உண்மையில் அவர் இந்த அறிவிப்பின் போது முழுவதும் பேசினார் மற்றும் பத்திரிகையாளர்களிடமிருந்து பல கேள்விகளுக்கு பதிலளித்தார் இது நீரிழிவு இதய நோய் உடல் பருமன் மற்றும் பிற நிலைமைகளுடன் போராடும் அமெரிக்கர்களுக்கு உதவும் இரண்டு மருந்துகளின் விலைகளில் அமெரிக்கர்களுக்கு வரலாற்று குறைப்பைக் குறிக்கிறது. ஜனாதிபதி டிரம்பின் இந்த அறிவிப்பு கணிசமான அளவு பணத்தையும் எண்ணற்ற அமெரிக்க உயிர்களையும் மிச்சப்படுத்தும் ஆனால் தோல்வியுற்றஇ தாராளவாத ஊடகங்கள் அதை மறைப்பதற்குப் பதிலாக ஒரு குப்பைக் கதையைத் தள்ள விரும்புகின்றனஎன தெரிவித்துள்ளார்
டிரம்ப் பொது இடங்களில் தவறாமல் தோன்றி ய்தியாளர்களுடன் நீண்ட கேள்வி-பதில் அமர்வுகளில் பங்கேற்கிறார். உதவியாளர்களும் அமைச்சரவை உறுப்பினர்களும் அவரது சகிப்புத்தன்மையைப் பாராட்டுவதுடன் எல்லா நேரங்களிலும் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகளைப் பெறுவதை விவரிக்கிறார்கள்.

வியாழக்கிழமை நிகழ்வுக்கு ஒரு நாள் முன்பு டிரம்ப் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பொருளாதார உரைக்காக மியாமிக்குச் சென்றார். கடந்த மாத இறுதியில் ஆசியா முழுவதும் மூன்று நாடுகள் பங்கேற்கும் ஒரு பயணத்தையும் அவர் முடித்தார்.
இருப்பினும் இதுவரை பதவியேற்றவர்களில் மிகவும் வயதான மனிதராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து அவரது உடல்நிலை குறித்த கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 79 வயதான ஜனாதிபதி கடந்த மாதம் வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்தில் உடல்நிலை சரியில்லாதபோது தனக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டதாகக் கூறினார் அதற்கான காரணத்தைக் கூறவில்லை.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்