மருத்துவர்களின் சம்பள முரண்பாடுகள் மற்றும் அவர்களின் நலன்புரி பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டால் இளம் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலையேற்படும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ எச்சரித்துள்ளார்.

நீண்டகாலமாக மருத்துவர்கள் சம்பள முரண்பாடுகள் மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற போதிலும் இதனை நிவர்த்தி செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் தற்போதைய உயர் வரிகள் காரணமாக மருத்துவர்கள் நிதிநெருக்கடியை எதிர்கொள்கின்றனர் குறிப்பாக தனியாக மருத்துவதொழிலில் ஈடுபடுபவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் பலர் தங்கியிருப்பதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் அவர்கள் தங்கள் வருமானத்தை வீடு மற்றும் குடும்ப நலனிற்காக செலவிடவேண்டிய நிலையில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர்கள் இங்கு பணிபுரிவதற்கு உரியை சூழலை ஏற்படுத்தாமல் வெளிநாட்டில் பணிபுரியும் மருத்துவர்களை இலங்கைக்கு அரசாங்கம் அழைப்பதை அவர் கண்டித்துள்ளார்
