வரவுசெலவுதிட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படாதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெலிமட உட்பட நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் இன்று தமது விவசாய நடவடிக்கைகளை புறக்கணித்தனர்.
கெப்பிட்டிபொல நகரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.நாட்டின் விவசாயிகளின் குரல் என்ற அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
அறுவடைகாலம் என்கின்ற போதிலும் வெங்காயம் உருளைகிழங்கு ஆகியவற்றிற்கான குறைந்த விலை குறித்து கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள் உள்ளுர் அறுவடைகாலத்தில் வெளிநாட்டிலிருந்து உருளைக்கிழங்கு வெங்காயத்தை இறக்குமதி செய்தமைக்காக அரசாங்கத்தை கண்டித்துள்ளனர்.
தங்கள் உற்பத்திகைள சந்தைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ள விவசாயிகள் வரவுசெலவுதிட்டத்தில் தங்களிற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
தங்கள் கோரிக்கைகளிற்கு உரிய தீர்வுவழங்கப்படும்வரை தங்களின் விவசாய நடவடிக்கைகளை இடைநிறுத்தும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.