2026 வரவுசெலவுதிட்டம் தொடர்பில் சர்வதேச நாணயநிதியம் சமர்ப்பித்த சில யோசனைகளை அரசாங்கத் நிராகரித்தது என அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் மார்ச் மாதம் முதல் சொத்துவரியை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச நாணயநிதியம் முன்வைத்த யோசனையை அரசாங்கம் நிராகரித்தது,எனினும் 2027 முதல் அது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
பணவீக்கத்தை விட குறைவான சம்பள அதிகரிப்பிற்கான யோசனையை நாங்கள் நிராகரித்தோம்,மக்களிற்கு எங்களிற்கு வழங்கிய ஆணையின்படி சம்பள அதிகரிப்பு பணவீக்கத்தை விட அதிகமாகயிருக்கவேண்டும் என நாங்கள் தெரிவித்தோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
