தென் கொரியாவின் தெற்கு கியோங்சாங்கில் உள்ள கோசியோங் என்ற நகரத்தில்நடந்த ஒரு துயர சம்பவத்தில் நிலத்தில் அமைந்திருந்த மீன் பண்ணையில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் இரண்டு இலங்கை தொழிலாளர்கள் மற்றும் ஒரு தள மேற்பார்வையாளரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 மற்றும் 30 வயதுடைய இரண்டு இலங்கையர்களும் 50 வயதுடைய ஒரு கொரிய மேற்பார்வையாளரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணியளவில் இளம் மீன் இனப்பெருக்கப் பிரிவுகளுக்கு தண்ணீர் வழங்கும் ஒரு பெரிய தொட்டியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 மீட்டர் அகலம் 3 மீட்டர் நீளம் மற்றும் 2 மீட்டர் ஆழம் கொண்ட அந்த தொட்டி தண்ணீரில் நிரப்பப்பட்டிருந்தது மேலும் ஒரு குறுகிய திறப்பு மற்றும் ஏணி வழியாக மட்டுமே அதை அணுக முடியும்.
இலங்கை தொழிலாளர்களில் ஒருவர் பணி உடையில் இருந்ததாகவும் மற்ற இருவரும் வழக்கமான உடையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது இது தொட்டியில் அவர்கள் இருந்ததன்நோக்கம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
தொழில்துறை விபத்துக்கான சாத்தியத்தை அதிகாரிகள் நிராகரிக்கவில்லை .சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவர்கள் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றார்களா அல்லது வேறு பணியில் ஈடுபட்டார்களா என்பதை ஆராய்ந்து வருகின்றனர்
