அம்பாந்தோட்டையிலிருந்து வேலணை பிரதேசத்திற்கு விஜயம் செய்த இளைஞர்கள் வேலணை பிரதேச செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு உரையாடினர்


தீவக வலய ஆசிரியர்களுக்கான” பிள்ளை நேய கற்பித்தல் வாண்மையினை விருத்தி செய்தல் மற்றும் சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி-

யாழ் சமூக செயற்பாட்டு மையம் KNH நிறுவனத்தின் அனுசரணையுடன் தீவகத்தின் வேலணை, காரைநகர் ஊர்காவற்துறை நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படும்
“சுய உதவிக் குழு அணுகு முறை ஊடாக பெண்களை வலுப்படுத்துவதனூடாக சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்”
எனும் செயற்திட்டத்தின் கீழ்
யாழ்ப்பாணம் J Guest விருந்தினர் விடுதியில்
தீவக வலய ஆசிரியர்களுக்கான” பிள்ளை நேய கற்பித்தல் வாண்மையினை விருத்தி செய்தல் மற்றும் சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பயிற்றுவிப்பாளர்களுக்கான (TOT) பயிற்சியானது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மதிப்பார்ந்த உயர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
இவ் ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர். திரு.ந.தயாபரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

இதில் வளவாளர்களாக
கல்வி அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரும் யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் சிரேஸ்ர விரிவுரையாளருமான மதிப்பார்ந்த திரு கலாநிதி.பா.தனபாலன் அவர்களும்
யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் ஓய்வு நிலை சிரேஸ்ர விரிவுரையாளர் திரு.கு.கமலநாதன் அவர்களும்
வேலணை பிரதேச செயலக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வி.நா.கிருஷாந்தினி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இதில் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்
வேலணை பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட பிரதேச மட்ட கலை இலக்கிய பரிசளிப்பு விழா

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட பிரதேச மட்ட கலை இலக்கிய பரிசளிப்பு விழா உதவி பிரதேச செயலாளர் திரு.க.பார்த்தீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு.த.அகிலன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு மாணவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்


நலிவுற்ற நிலையில் உள்ள இரு குடும்பங்களுக்கு நலன் விரும்பி ஒருவரால் உலர் உணவு பொதி அன்பளிப்பு செய்யப்பட்டது.
