2026ம் ஆண்டிற்கான வடமாகாண பொருளாதார உச்சிமாநாட்டிற்கான பிரதான அனுசரணையாளராகவும் வங்கி அனுசரணையாளராகவும் ஹற்றன் நஷனல் வங்கி மனேஜ்மென்ட் கிளப்புடன் இணைந்துகொண்டுள்ளது.
வடபகுதிக்கான முதலீட்டை ஈர்ப்பது தொழில்முனைவு மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
வடமாகாண பொருளாதார மாநாடு 2026 குறித்து அறிவிக்கும் நிகழ்வில் உரையாற்றிய ஹற்றன் நஷனல் வங்கியின் இயக்குநரும் பிரதமநிறைவேற்று அதிகாரியுமான டமித் பெலவத் யாழ்ப்பாணத்தில் வங்கியின் 53 வருடங்களிற்கு மேற்பட்ட பாரம்பரியத்தையும்இஇலங்கையில் 135 வருட பாரம்பரியத்தையும் நினைவுகூர்ந்தார்.
வடமாகாணத்திலிருந்து ஹற்றன் நஷனல் வங்கியில் சேமிக்கப்பட்ட பணம் 130 பில்லியனிற்கும் மேல் என தெரிவித்துள்ள அவர் வங்கி 60 பில்லியனிற்கும் மேல் வழங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்தில் மீள செலுத்துதல் என்பது வலுவாக உள்ளது என தெரிவித்துள்ள அவர் உள்ளுர் தொழில்முனைவோரின் ஒழுக்கத்தினையும் மீள்எழுச்சி தன்மையையும் இது வெளிப்படுத்துகின்றது.
இலங்கையின் வளர்ச்சியின் மிகவும் நம்பிக்கைக்குரிய முன்னரங்காக வடமாகாணம் உருவெடுத்துகின்றதுஇஎன தெரிவித்த அவர் பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிப்பது நாட்டின் நீண்டகால மீட்சிக்கு அவசியமாகும் இசமீபத்தைய ஆண்டுகளில் வடபகுதி வலுவான பொது தனியார் கூட்டாண்மைகளால் ஆதரிக்கப்படும் தொழில்முனைவுஇபுதுப்பித்தக்க எரிசக்தி-மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட விவசாயத்திற்கான மையமாக உருவெடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கொள்கைக்கும் உண்மையான பொருளாதார வாய்ப்புக்கும் இடையிலான பாலமாக நிதி உள்ளடக்கத்தைஹற்றன் நஷனல் வங்கி கருதுகிறது . “மூலதனத்திற்கான அணுகலை விரிவுபடுத்துவதன் மூலமும் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமும் வடக்கின் வளர்ச்சிக் கதை மிகவும் சீரான மற்றும் மீள்தன்மை கொண்ட தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பதை உறுதி செய்வதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்
வடமாகாண பொருளாதார மாநாடு 2026 இல் ஈடுபடுவதன் மூலம் தொழில்முனைவு முதலீட்டுத் தயார்நிலை மற்றும் நிலையான பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் மேம்பாட்டு கூட்டாளர்களுடன் ஹற்றன் நஷனல் வங்கிஒத்துழைக்கும். இந்த உச்சிமாநாடு மூத்த கொள்கை வகுப்பாளர்கள் இராஜதந்திரிகள் மற்றும் வணிகத் தலைவர்களை கொள்கை உரையாடல்கள் திட்ட காட்சிப்படுத்தல்கள் மற்றும் கூட்டாண்மை விவாதங்களுக்காக ஒன்றிணைக்கும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கான விரிவான வழிகாட்டியான வடக்கு முதலீட்டு வாய்ப்புகள் அறிக்கையின் வெளியீட்டையும் இது காணும்.
