டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்த சாந்தினி சவுக் சர்வ வியாபார் மண்டல் (வர்த்தகர்கள் சங்கம்) தலைவர் சஞ்சய் பார்கவா, கூறியதாவது; “இது ஒரு பயங்கரமான வெடிச்சத்தம், அதன் அதிர்வுகள் 700 முதல் 900 மீ. தொலைவு வரை உணரப்பட்டது. நிலநடுக்கம் தாக்கியது போல் கட்டிடங்கள் அதிர்ந்தன… சாலையில் உடல்கள் சிதறிக் கிடந்தன – ஒரு இடத்தில் ஒருவரின் கையும், மற்றொரு இடத்தில் ஒருவரின் தலையும் கிடந்தது” என்று அதிர்ச்சியில் விவரித்தார்
