பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவதை தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் பொலித்தீன் உற்பத்தியை பாதிக்கவில்லை என பொலித்தீன் தொழில்துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என அகில இலங்கை சிறுகைத்தொழில்துறை சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கை பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகள் மேலதிக வருமானம் உழைப்பதற்கு உதவியுள்ளது என தெரிவித்துள்ள சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிருக்சன குமார தாங்கள் கொள்வனவு செய்த பொருட்களை வீடுகளிற்கு கொண்டு செல்வதற்கு நுகர்வோர் தொடர்ந்தும் பொலித்தீன் பைகளை நம்பியிருப்பதால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சாத்தியமற்றது என குறிப்பிட்டுள்ளார்.
விதிமுறைகளை மீற பல கடைகள் தொடர்ந்தும் இலவசமாக ஷாப்பிங் பைகளை வழங்குகின்றன என தெரிவித்துள்ள அவர் பொலித்தீன் பைகள் உற்பத்தியோ அல்லது விற்பனையோ குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தெவலபுர பொலிஸ் பிரிவின் கீழ் 1200க்கும் மேற்பட்டவர்கள் பொலித்தீன் பைகளை உற்பத்தி செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
