போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர் நலன்சார் விழிப்புணர்வு செயற்றிட்டம் *

கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் மாதிரி கிராம தெரிவில் உள்ள கரவெட்டி மேற்கு பிரிவில் ஸ்ரீ நாரத வித்தியாலய மண்டபத்தில் நேற்றைய தினம் (10.11.2025) பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டம் வடக்கு மாகாண நன்னடத்தை திணைக்களம் மற்றும் கரவெட்டி பிரதேச செயலகம் இணைந்து மேற்கொள்ளபட்டது.


இந் நிகழ்வானது கரவெட்டி பிரதேச செயலாளர் சார்பில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. கிருஷ்ணாளினி நிரூபன் அவர்கள் தொடக்கவுரையை வழங்கி ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து கிராம மட்ட பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு காணுதல் தொடர்பாக யாழ்ப்பாணம் சிரேஷ்ட நன்னடத்தை அலுவலர் திரு.வ.விக்னராஜா அவர்களும், சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கரவெட்டி NCPA சிறுவர் பாதுகாப்பு அலுவலர் திருமதி ஜெனோபா அவர்களும், சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக கரவெட்டி நன்னடத்தை அலுவலர் திருமதி ச.அகிலா அவர்களும், போதைப்பொருள் பாவனை சார்ந்த விடயங்கள் தொடர்பாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் திருமதி அ. சியாமினி அவர்களும் விழிப்புணர்வை மேற்கொண்டனர்.
நிகழ்வில் பிரிவின் கிராம மட்ட உத்தியோகத்தர்களும் ,பிரதேச செயலக crpa , மற்றும் போதை தடுப்பு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். இதற்கான நிதி அனுசரணை வடக்கு மாகாண நன்னடத்தை திணைக்கள PSDG செயற்றிட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்