பொருளதார மத்திய நிலையங்கள் குறித்த கருத்தால் நாடாளுமன்றத்தில் இன்று அமளிதுமளி நிலவியது
பொருளாதார மத்திய நிலையங்களில் காணப்படும் குழப்ப நிலையை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறிஜெயசேகர பொருளாதார மத்திய நிலையங்கள் இயங்குவதில்லை என தெரிவித்தார்.
பொருளாதார மத்திய நிலையங்களில் கொள்வனவு விற்பனை இடம்பெறுவதில்லை என்றார் அவர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க அரசாங்கம் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துகின்றது குறிப்பாக வெங்காய உருளைக்கிழங்கு விவசாயிகள் தொடர்பில் என அவர் தெரிவித்தார்.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த அவைதலைவர் பிமல்ரத்நாயக்க கேள்விகளை எழுப்புவதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையின் நடவடிக்கைகளை குழப்புவதற்கு அனுமதிக்ககூடாது என்றார்.
இதன் பின்னர் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன