ஆரம்பபாடசாலையில் கல்விகற்கும் பிள்ளையால் கூட மக்களிற்கு அதிகவரிகளை விதித்து திறைசேரியை நிரப்ப முடியும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் திறைசேரி நிரம்பிவழிவதாக பெருமை பேசுகின்றது,பொதுமக்களை வரிசுமைக்கு உட்படுத்துவதன் மூலம் திறைசேரியை நிரப்ப சிறுபிள்ளையால் கூட முடியும்.
அரசாங்கம் அளவுக்கதிகமான வரிகளை விதித்து மக்களை வரிச்சுமைக்குள்ளாக்கி 287 பில்லியனை அரசவருவாயாக பெற்றுள்ளது,இது சர்வதேச நாணயநிதியம் நிர்ணயித்த இலக்கை விட அதிகமாகும் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேசநாணயநிதியத்தின் நிபந்தனையின் படி வருவாய் இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15வீதமாகும் ஆனால் அரசாங்கம் அதனை மீறி 15.9 அரசவருவாயை ஈட்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.