பயணிகளிற்கு மேலும் சிறப்பான சேவை வழங்குவதற்காக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேலும் 14 பயணிகளை பதிவுசெய்யும் இடங்களை – செக் இன் கவுண்டர்களை திறந்துள்ளதாக விமானநிலைய மற்றும் விமானபோக்குவரத்து சேவை அறிவித்துள்ளது.
ஒருமாதகாலத்திற்குள் இதனை உருவாக்கியுள்ளதாகவும் இது இலங்கை சுற்றுலா அதிகாரசபைக்கும் அதன் முக்கிய சகாக்களிற்கும் இடையிலான ஒத்துழைப்பின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றது என விமானநிiலைய மற்றும் விமானப்போக்குவரத்து சேவை தெரிவித்துள்ளது.

விமானநிலைய பணிகள் எந்தவித குழப்பங்களும் இன்றி இயங்குவதை உறுதிசெய்வதற்காகவும்,குளிர்காலத்தில் கொழும்பு விமானநிலையத்தின் ஊடாக பயணம் செய்யும் பயணிகளிற்கு சிறந்த சேவையை வழங்குவதும் இதன் நோக்கம் என விமானநிலைய மற்றும் விமானப்போக்குவரத்து சேவை தெரிவித்துள்ளது.
