இலங்கை சுங்கம் தடுத்துவைத்துள்ள 625 பிஐடி வாகனங்களை அந்தந்த வங்கி உத்தரவாதங்கள் மற்றும் நிறுவன உத்தரவாதங்களுக்கு உட்பட்டு விரைவாக விடுவிக்குமாறு மேல்நீதிமன்றம் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை சுங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள படி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜோன்ஹீல்ஸ்சிஜி ஆட்டோ தனியார் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை ஆராய்ந்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மனுக்கள் தற்போது சுங்கத்துறை வசம் உள்ள சில பிஐடி வாகன மோட்டார் திறன் தொடர்பான சர்ச்சையுடன் தொடர்புடையவை.
சுங்க இயக்குநர் ஜெனரல் சார்பாகமேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தனஇ வங்கி உத்தரவாதங்களுக்கு சமமான மதிப்புக்கு கார்ப்பரேட் உத்தரவாதங்களின் அடிப்படையில் பின்வரும் வாகன மாதிரிகளை வெளியிட இலங்கை சுங்கம்ஒப்புக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்
