நாம் நினைப்பதைவிட மிகமோசமான நிலையில் எமது சமூகம் உள்ளது-கைப்பேசிக்கு அடிமையாகும் மாணவர்கள், இளம் பிள்ளைகளால் பல்வேறு பிரச்சினைகள் தினம் தினம் உருவாகின்றன-வடக்கு மாகாண ஆளுநர்

மாற்றுத்திறனாளிகளுக்கு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் திட்டங்களை முன்வைத்தாலும் அதற்கும் நிதி ஒதுக்குவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. எனவே, அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து பொதுவேலைத் திட்டத்தை வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என வடக்கு மாகாண

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் (JSAC) ஏற்பாட்டில், இணைந்து ஒளிரும் மலர்கள் (Inclusive Talent Show) நிகழ்வு கொடிகாமம் நட்சத்திர மஹாலில் இன்று செவ்வாய்க்கிழமை (11.11.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
யாழ். மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் யாழ். சமூக செயற்பாட்டு மையத்துடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன். மீள்குடியேற்றப் பகுதிகளில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளேன்.
சமூகப் பிரச்சினைகள் இன்று அதிகரித்துள்ளன. சிறுவர் குழுக்கள் மற்றும் பெண்கள் குழுக்களை அண்மையில் நான் சந்தித்திருந்தேன். எமது சமூகத்தில் நடைபெறும் பல்வேறு விடயங்களையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். நாம் நினைப்பதைவிட மிகமோசமான நிலையில் எமது சமூகம் உள்ளது.

,north

தற்போது அரசாங்கம் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளது. வடக்கிலும் அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதை அரசாங்கம் முன்னெடுத்திருக்காவிட்டால் எமது சமூகமே அழிவைத்தான் சந்தித்திருக்கும்.
கைப்பேசிக்கு அடிமையாகும் மாணவர்கள், இளம் பிள்ளைகளால் பல்வேறு பிரச்சினைகள் தினம் தினம் உருவாகின்றன. கைப்பேசி விளையாட்டுக்களால் பணத்தை இழப்பது அதனால் தவறான முடிவெடுத்து உயிர்துறப்பது, ஏமாற்றப்படுவது என்று பல விடயங்கள் நடக்கின்றன.

இவை தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும், நாமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், வரவு – செலவுத் திட்டத்தில் எமது மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு மேலதிகமாகவும் வேறு பல திட்டங்கள் ஊடாக நிதியை ஒதுக்குவதற்குத் தயாராகவே உள்ளது. நாம் பொருத்தமான திட்டங்களை முன்வைத்தால் அந்த நிதியையும் பெற்று எமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில், யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஆளுநர் சபைத் தலைவரும், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பீடாதிபதியுமான மருத்துவக் கலாநிதி ரா.சுரேந்திரகுமாரன், யாழ். போதனா மருத்துவமனையின் உள மருத்துவ நிபுணர் எஸ்.சிவதாஸ், யாழ். பல்கலைக்கழக சட்டபீடத்தின் தலைவர் திருமதி கோசலை மதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டன

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்