பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்தும் சுகாதாரம் உட்கட்டமைப்பு கல்வி போன்ற துறைகளில் கடந்த சில வருடங்களாக இலங்கை குறைவாக முதலீடு செய்கின்றது என டிலொய்ட்ஸ்ரீலங்கா மற்றும் மாலைதீவின் ஆபத்து மற்றும் பரிவர்த்தனை பிரிவின் தலைவர் ருவிணி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை கல்வி சுகாதாரம் உட்கட்டமைப்பு போன்ற துறைகளில் குறைவாகவே முதலீடு செய்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பல கட்டணங்களை கட்டாயமாக செலுத்தவேண்டிய நிலையில் இருந்ததே இதற்கு காரணம் என தெரிவித்துள்ள அவர் குறிப்பாக வட்டிகளை செலுத்தவேண்டிய நிலையில் இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் வரிவருமானம் அதிகரித்துவரும் நிலையில் எதிர்கால வளர்ச்சிக்காக கல்வி சுகாதாரம் உட்கட்டமைப்பு போன்ற துறைகளில் இலங்கை முதலீடு செய்யும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் வரவுசெலவுதிட்டத்திற்கான இலக்குகளை அடைய முயலும்போது,முக்கிய உட்கட்டமைப்புகளிற்கான முதலீடுகளை குறைக்க முயல்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
2026 நடுப்பகுதியில் ஏழு வீத வளர்ச்சியை அடைவதற்கு பொது முதலீடு மாத்திரம் போதாது என தெரிவித்துள்ள டிலொய்ட்ஸ்ரீலங்கா மற்றும் மாலைதீவின் என ஆபத்து மற்றும் பரிவர்த்தனை பிரிவின் தலைவர் ருவிணி பெர்ணாண்டோ பொதுதனியார் கூட்டாண்மைகளை உருவாக்கும் ஜனாதிபதியின் முயற்சியை பாராட்டியுள்ளார்.
பொதுமுதலீட்டின் அனைத்து துறைகளிலும் பொதுதனியார் கூட்டாண்மை சாத்தியம் என தெரிவித்துள்ள அவர்பல நாடுகள் வெற்றிகரமாக இந்த மாதிரியை பின்பற்றியுள்ளன ஆனால் இலங்கையில் பொதுதனியார் கூட்டாண்மைக்கான சட்டம் உள்ள போதிலும் இலங்கை வலுசக்தி துறைமுகம் போன்ற துறைகளில் இதனை வெற்றிகரமாக முன்னெடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.